தமிழில் மீண்டும் உருவாகிறதா இன்னொரு காதல் காவியம்?
இயக்குநர் இளன் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த திரைப்படமும் காதல் கதை தானாம். இந்த படத்தின் ஹீரோவாக இளன் தேர்ந்தெடுத்து இருக்கும் அந்த காதல் ரோமியோ யார் என்று தெரியுமா?
2015 இல் கிரகணம் என்னும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளன். சில காரணங்களால் இந்த திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்தபடியாக எடுத்த திரைப்படத்தில் இளைஞர்கள் அனைவரையும் தன்வசம் ஈர்த்துவிட்டார் இளன்.தமிழ்நாட்டு பெண்கள் அனைவரின் க்ரஷ்ஷாக இருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் இயக்குநர் இளன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பியார் பிரேமா காதல்.
இது இயக்குநர் இளனுக்கு முதல் படமாக அமைந்தது. நவீன கால காதல் மற்றும் காதலர்களின் மனப்பான்மையை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட அந்த திரைப்படம், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. காதலர்கள் மற்றும் இளைஞர்களின் மனதையும் கவர்ந்து.நவீன கால காதல் ரியாலிட்டி என ஒருபுறமும் கலாச்சார சீர்கேடு என ஒருபுறமும் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
காதல் ரோமியோ தனுஷ்:
இதனை அடுத்து தற்போது இயக்குநர் இளன் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த திரைப்படமும் காதல் கதை தானாம். இந்த படத்தின் ஹீரோவாக இளன் தேர்ந்தெடுத்து இருக்கும் அந்த காதல் ரோமியோ யார் என்று தெரியுமா??? தமிழ் திரையுலகின் காதல் மன்னன் தனுஷ் தான் இயக்குநர் இளனின் அடுத்த படத்தின் ஹீரோ.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளன் தனுஷிடம் காதலை மையமாகக் கொண்டு ஒரு கதை கூறியதாகவும், அந்த கதை நடிகர் தனுஷுக்கு மிகவும் பிடித்து போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 3 படத்தில் பார்த்த தனுஷை மீண்டும் திரையில் பார்க்கும் வாய்ப்பு வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இளனும் தனுஷூம் இணையும் தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சிற்றம்பலம் :
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் ஹாலிவுட்டில் அவர் நடித்த திரைப்படம் நெட்பிளிக்ஸ்ஸில் வெளியானது. இதில் தி லோன் ஊல்ஃப் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் தொடர்ச்சியும் எடுக்கப்பட உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தனுஷின் திரைப்படம் திருச்சிற்றம்பலம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, நித்யா மேனன் என ஒன்றுக்கு மூன்று ஹீரோயின்கள். வழக்கம் போல அதிரடி, ஆக்சன், மாஸ் என இல்லாமல் காதல், குடும்பம் என ஒரு பீல் குட் மூவியை கொடுத்துள்ளார். டி என் ஏ காம்போவில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாடல்களும் மெகா ஹிட் ஆகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் அடுத்த திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார். ரொமான்டிக் பாய் தனுஷை இளன் இயக்கத்தில் விரைவில் நாம் திரையில் பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்