Tamil Kudimagan : ’கீழ்சாதின்னு சொல்ற அடையாளம் மாறலையே’ ... கவனம் ஈர்க்கும் சேரனின் “தமிழ் குடிமகன்” டீசர்..!
நடிகர் சேரன் நடித்துள்ள தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

நடிகர் சேரன் நடித்துள்ள தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
View this post on Instagram
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேரன். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார், உணர்வுப்பூர்வமாக மண் மணம் மாறாமல் 90களில் இவர் இயக்கிய பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து என பல படங்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது.
இதனிடையே தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதையில் ஹீரோவாக அறிமுகமான சேரனுக்கு ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து படங்கள் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தான் இயக்கிய படங்களிலும், பிற இயக்குநர்களின் படங்களிலும் சேரன் நடித்து வந்தார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் கடைசியாக ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
View this post on Instagram
இந்நிலையில் அடுத்ததாக சேரன் நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள், துணை நடிகர், நடிகைகள் ஆகியோர் வெளியிட்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் மாலை 6 வெளியாகியுள்ளது. சாதிய பாகுபாடுகளால் அவமானப்படும் நபராக சேரன் நடித்துள்ளார். சேரன் குடும்பத்தில் நிகழும் காதலால் அக்குடும்பத்தினர் படும் துன்பங்கள் ஆகியவை கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தான் சார்ந்த சாதியை மட்டும் இன்னும் அடையாளம் மாறாமல் “கீழ் சாதி” என சொல்கிறார்கள் என கேட்கும் வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.





















