‛பதில் சொல்ல முடியவில்லை... வருத்தம் தெரிவிக்கலாம்...’ ஜெய்பீம் விவகாரத்தில் சேரன் கருத்து!
‛‛எந்த பதிலும் சொல்ல முடியாமல் நாம் நிற்க காரணம்.. அதற்கான பதிலை சொல்லிவிட்டு வருத்தம் தெரிவித்தால் தீர்ந்துவிடும்,’’ -சேரன்
ஜெய்பீம் திரைப்படம் வெளியானதில் இருந்து அடுத்தடுத்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. படைப்பு ரீதியாக படம் வெற்றி பெற்ற நிலையிலும், படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு பாமக, வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இருதரப்பு அறிக்கை போர் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான சேரன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அது சூர்யாவுக்கு ஆதரவாகவும் இல்லாமல், எதிர்ப்பாவும் இல்லாமல், நடுவில் நிற்பதாக உள்ளது. படம் நல்ல படம் தான், அதில் எதிர்ப்புக்கு காரணமாக விசயம் இருப்பதாகவும், அதற்கான பதிலை சொல்ல முடியாமல் தவிப்பதாகவும், அதற்கான பதிலை கூறிவிட்டால், பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் அதில் சேரன் கூறியுள்ளார்.
படம் உருவாக்கத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் உருவாகவில்லை. போலீஸ் அதிகாரியின் பெயர் மாற்றப்பட்டதும், முக்கிய கதாபாத்திரங்களின் உண்மை பெயர் அப்படியே இருப்பதுமே எந்த பதிலும் சொல்ல முடியாமல் நாம் நிற்க காரணம்.. அதற்கான பதிலை சொல்லிவிட்டு வருத்தம் தெரிவித்தால் தீர்ந்துவிடும்
— Cheran (@directorcheran) November 16, 2021
இதோ சேரன் கூறியுள்ள கருத்து அப்படியே...
‛‛படம் உருவாக்கத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் உருவாகவில்லை. போலீஸ் அதிகாரியின் பெயர் மாற்றப்பட்டதும், முக்கிய கதாபாத்திரங்களின் உண்மை பெயர் அப்படியே இருப்பதுமே எந்த பதிலும் சொல்ல முடியாமல் நாம் நிற்க காரணம்.. அதற்கான பதிலை சொல்லிவிட்டு வருத்தம் தெரிவித்தால் தீர்ந்துவிடும்’’
சேரனின் இருந்த கருத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அவரை வசை பாடி வருகின்றனர். அதனால் அதற்கும் அவர் பதிலளித்துள்ளார். தன்னுடைய கருத்தை புரிந்து கொள்ளாமல் தன்னை வசைபாடுவதாகவும், தனது கருத்தை புரிந்து கொள்ளுமாறும் அவர் பதிவிட்டுள்ளார்.
https://t.co/Ev8GjQTjAE
— Cheran (@directorcheran) November 19, 2021
இதைப்படிச்சிட்டு பேசுங்க.. பதிவு போடுங்க ..
ஆனாலும் சேரனின் விளக்கத்தை யாரும் ஏற்றதாக தெரியவில்லை. அவர் வன்னியர் சங்கத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதாக கூறி, ஒரு தரப்பினர் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
etetet