மேலும் அறிய

இயக்குனராகும் முன் ரூம் பாயாக பணியாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் ஆகும் முன் ஓட்டலில் ரூம் பாயாக பணியாற்றிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாகேஷ் உடன் நடித்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் அஜித்தின் ‘தீனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு, விஜயகாந்த்தை வைத்து ‘ரமணா’ என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியை வைத்து ரமணாவை ரீமேக் செய்து அங்கும் வெற்றி பெற்றார். பின்னர், சூர்யாவுடன் கஜினி, ஏழாம் அறிவு, அமீர்கானுடன் கஜினி இந்தி ரீமேக். விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, சர்கார், மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர், ரஜினியுடன் தர்பார் உள்ளிட்ட படங்களை இயக்கி தென்னிந்தியாவின் டாப் இயக்குநராக வளம் வருகிறார்.

முருகதாஸ் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். கத்தி, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் சிறிதே வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநர் ஆவதற்கு முன்னதாகவே ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து உள்ளதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

 அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பூச்சூடவா’. உதயசங்கர் என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

''சவுதி அரேபியா ஸ்டைல்ல இவனுங்களுக்கு தண்டனை கொடுக்கணும்” - மதுரை முத்து‛சார்... ரம்பா ஸ்வீட் சாப்பிடுது சார்...’ இன்னைக்கு அவங்க பெர்த் டேப்பா!

முருகதாஸ்  ஷேர் செய்துள்ள வீடியோவில், நாகேஷ் மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர். அதில் சர்வராக தோன்றும் ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். வீடியோவின் கீழ்  ‘ஸ்டோர் ரூம் மெமரிஸ்’ என்றும் முருகதாஸ் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குநராக இருந்தபோது இந்தப் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARMurugadoss (@a.r.murugadoss)

சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் முருகதாஸ் படம் இயக்குவதாக இருந்த நிலையில் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகிக்கொண்டார்.  தெலுங்கு நடிகர் ராம்-ஐ வைத்து இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நடிகர் ராம் மறுத்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில்தான் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 10 மணிக்குள்ளே முடிச்சுடுங்க.. சென்னையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
Nellai Mubarak: எஸ்டிபிஐ கட்சியிலிருந்து நெல்லை முபாரக் விலகல்.. என்ன காரணம்? அடுத்து இணையப்போகும் கட்சி எது?
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
நவ.18 முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா! - பறவைகள் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
Annan Seer Thittam: பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
Embed widget