Alphonse Putheran: வெளியானது அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தபட அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கு ‘கிஃப்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கு ‘கிஃப்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். பல குறும்படங்களை இயக்கிய அவர், 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு ‘நேரம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிவின் பாலி ஹீரோவாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 3 ஹீரோயின்களை கொண்டு 2015 ஆம் ஆண்டு ‘பிரேமம்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும் அளவிற்கு இந்திய அளவில் ஹிட் அடித்தது. திரைக்கதையில் காட்டியிருந்த மேஜிக் பிரேமம் படத்தை நினைவுக்கூறும் வகையில் இருக்கிறது. பின்னர் 7 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன் ‘கோல்டு’ படத்தை இயக்கியிருந்தார். கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர்.
#GIFT pic.twitter.com/WQoiAjG36Z
— Alphonse Puthren (@puthrenalphonse) July 4, 2023
இப்படியான நிலையில், அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படத்திற்கு கிஃப்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மொத்தம் 7 பாடல்கள் இந்த படத்தில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கிஃப்ட் படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ், சார்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
அஜித்தை இயக்க ஆசைப்படும் அல்போன்ஸ் புத்திரன்
இதனிடையே இணையத்தில் ரசிகர் ஒருவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அல்போன்ஸ் அளித்த பதில் சில மாதங்களுக்கு முன் வைரலானது அதில் ”அஜித்தை வைத்து படம் இயக்க வேண்டுமென அந்த ரசிகர் கேட்டுக் கொண்டார். அதற்கு, “அஜித்தை என்னால இதுவரைக்கும் மீட் பண்ண முடியவில்லை. நிவின் பாலி ஒருமுறை என்னிடம், பிரேமம் படம் நல்லா இருக்குது என்றும், அதில் காலேஜ் இன்ட்ரோ சீன், களிப்பு பாடல் தனக்கு பிடித்ததாக அஜித் சொன்னதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குறைந்தது 10 முறை நான் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் பேசினேன். அஜித்துடன் மீட்டிங் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு சொன்னேன். 8 வருடங்கள் கடந்துடுச்சு. வயசாகுறதுகுள்ள அஜித்தை பார்த்தேன் என்றால் நல்ல படம் பண்ணுவேன். நீங்க ஒவ்வொரு வாட்டியும் இந்த கேள்வி கேட்கும்போது எனக்கு எவ்வளவோ வலிக்கும் தெரியுமா?.. நான் முயற்சி பணி வெறுத்து போய்ட்டேன்.
நீங்க கேட்கும் போது முதல்ல எனக்கு கோபம் வரும். அதன்பிறகு நீங்களும் என்ன மாதிரி ஒரு அஜித் ரசிகரா இருக்கலாம்ன்னு நினைச்சி பாக்காத மாதிரி போயிடுவேன். ஒருவேளை நான் அஜித்தை வைத்து படம் பண்ணால் கண்டிப்பாக ஹாலிவுட்டின் தியேட்டரில் திரையிடப்பட்டாலும் அந்த படம் 100 நாட்கள் ஓடும் என அல்போன்ஸ் புத்திரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.