Ajithkumar: "துவம்சம் பண்ணிய அஜித் ரசிகர்கள்" ரெட் படத்தில் இப்படி ஒரு சம்பவமா? மனம் திறந்த சிங்கம்புலி
ரெட் படத்தின்போது அஜித்தை பார்ப்பதற்காக குவிந்த ரசிகர்களையும், அதன் பின்னர் படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதையும் அப்படத்தின் இயக்குனர் நடிகர் சிங்கம்புலி கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். இவருக்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான படம் ரெட். 2002ம் ஆண்டு வெளியான இந்த படத்தை நடிகர் சிங்கம்புலி இயக்கியிருந்தார்,
அடித்து நொறுக்கிய ரசிகர்கள்:
இந்த படத்தின் கதைக்களம் மதுரை பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின்போது நடைபெற்ற சம்பவத்தை நடிகரும், இயக்குனருமான சிங்கம்புலி மனம் திறந்து பேசியுள்ளார். அதுதொடர்பாக அவர் கூறியதாவது, “ மதுரையில் கல்யாண மண்டபத்திற்கு வந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். ஒரு 10 நிமிடத்தில் வந்து வெளியே சென்றுவிட்டார். இவரைப் பார்க்க ரசிகர்கள் எல்லாரும் வந்தனர்.
அவரை காணவில்லை என்று திருமண மண்டபத்தை அடித்து நொறுக்கி, ஒரு 20 டிவியை அடித்து உடைத்து துவம்சம் பண்ணிட்டாங்க. தலய காணோம், தலய காணோம்னு துவம்சம் பண்ணிட்டாங்க. சென்னை வந்ததும் அஜித் என்னை அழைத்தார்.
அஜித் தந்த ஐடியா:
10 நிமிஷம் பாக்கலனு திருமண மண்டபத்திற்கு 2.5 லட்சம் ஃபைன் கட்டிட்டு வந்துருக்கோம். நீங்க எப்படி என்னை மேலமாசி வீதி, கீழ மாசி வீசி, தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம்னு நடிக்குறது? கூட்டத்தை யார் கட்டுப்படுத்துவது? இடையில மினிஸ்டர் வந்தா எடுக்க முடியாது. கலெக்டர் வந்தா எடுக்க முடியாது. ஃபங்ஷன் வந்தா எடுக்க முடியாது. இது எப்போ முடியும். சின்னதா நான் தங்குவது போல செட் போட்டு எடுத்துக்கலாம் என்றார்.
நானும் சரி ஓகே என்றேன். ஹைதரபாத்தில் 7 ஏக்கரில் செட் போட்டு எடுத்தோம். அங்கதான் எடுப்பேன் என்று சொல்லியிருந்தால் எனக்கு அந்த படம் கிடைத்திருக்காது.”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
ரெட் படத்தில் நடிகர் அஜித்துடன் மணிவண்ணன், பிரியா கில், ரகுவரன், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்தனர். தேவா இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் கலவையான விமர்சனங்களுடன் வெற்றி பெற்றது.
சிங்கம்புலி அந்த படத்தை ராம்சத்யா என்ற பெயரில் இயக்கியிருப்பார். அதன்பின்னர், சூர்யாவை வைத்து மாயாவி என்ற படத்தை இயக்கினார். மேலும், பாலாவின் பிதாமகன் படத்திற்கும், ரேணிகுண்டா படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.
நான் கடவுள் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான சிங்கம்புலி அதன்பின்னர் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளார். மகாராஜா படத்தில் வில்லனாக நடித்தும் அசத்தியிருப்பார்.