வலிமை படம் நல்லாதான் இருந்துச்சு.. ஆனா.. மனம்திறந்த வெங்கட் பிரபு..
அஜித் குமார், வெங்கட் பிரபு என்றாலே அடுத்ததாக மங்காத்தாவும் நம் மனதில் தொற்றிக் கொள்ளும். அஜித் குமாருக்கு செம்ம மாஸ் கேட்ட்கரி கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு. சொல்லப் போனால் வெங்கட் பிரபு கேரியரிலும் இந்தப் படம் ஒரு திருப்புமுனை படம் தான்.
அஜித் குமார், வெங்கட் பிரபு என்றாலே அடுத்ததாக மங்காத்தாவும் நம் மனதில் தொற்றிக் கொள்ளும். அஜித் குமாருக்கு செம்ம மாஸ் கேட்டகரி கொடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. சொல்லப் போனால் வெங்கட் பிரபு கேரியரிலும் இந்தப் படம் ஒரு திருப்புமுனை படம் தான்.
வெங்கட் பிரபு, அஜித் இணைந்து மங்காத்தா 2 செய்ய வேண்டும் என்பதுதான் அஜித் குமார் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையும் கூட. இந்த ஆசையை வெங்கட் பிரபுவும் கூட தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் வெளியான வலிமை படம் குறித்துப் பேசியிருக்கிறார் வெங்கட் பிரபு. அவரது விமர்சனம் நேர்மையான விமர்சனம் என்ற பாராட்டையும் பெற்று வருகிறது.
"வலிமை படம் நன்றாக இருந்தது. ஸ்டண்ட் எல்லாம் சூப்பர். ஆனால், நான் அதிகம் எக்ஸ்பெக்ட் பண்ணத்தால், படம் முழு திருப்த்தியை எனக்கு தரவில்லை. எச். வினோத்தின் டீடைலிங் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனால், எதோ ஒரு இடத்தில், எனக்கு வலிமை படம் முழு திருப்த்தி தரவில்லை " என்று வெங்கட்பிரபு வலிமை படம் பற்றி தனது மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியானது வலிமை திரைப்படம். அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் படிப்பிடிப்பு மட்டுமே கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமா சுமார் இரண்டரை ஆண்டுகள் நடைபெற்றது. இதனால், படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால், படம் வெளியானபோது யூ டியூப் விமர்சகர்கள் பலரும் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் அளித்தபோதும், படம் பெண்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் நீளமும் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, திரையரங்குகளில் பெரும் வசூலை ஈட்டி வரும்நிலையிலும், Zee 5 இல் OTT வெளியிடப்பட்டதில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு விமர்சித்துள்ளார்.
இவை ஒருபுறம் இருக்க நடிகர் அஜித் குமார் அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் தனது 61வது படத்தில் எச். வினோத் உடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் (ஏப்ரல்) இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்க இருக்கிறது.
'ஏகே 61' ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.