மேலும் அறிய

Diary: அருள்நிதியின் அதிரடி ஹிட் ‛டைரி’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டைரி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான புதிய  அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் 23 நாள் முதல் டைரி திரைப்படம் பிரபல ஓடிடி தளமான ஆஹா தமிழ் தளத்தில் வெளியாக இருக்கிறது

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி - பவித்ரா மாரிமுத்து நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டைரி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இது ஒட்டு மொத்த டைரி படக்குழுவினரையும் சந்தோஷத்தில் உற்சாகமாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்பதால் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. இந்த படத்திற்காக அதிகமான விளம்பரமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

டைரி ஓடிடி ரிலீஸ் :

இந்நிலையில் டைரி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான புதிய  அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் செப்டம்பர் 23 நாள் முதல் டைரி திரைப்படம் பிரபல ஓடிடி தளமான ஆஹா தமிழ் தளத்தில் வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் செப்டம்பர் 23 ஆம் தேதி சினிமா தினம் அனுசரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி சினிமா தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில,  பிரம்மாஸ்திர திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நன்றி தெரிவித்த அருள்நிதி !

மேலும் முன்னதாக 'டைரி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அருள்நிதி அறிக்கையை வெளியிட்டு தனது நன்றியினை தெரிவித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சமீபத்தில் வெளியான டைரி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு மிக்க நன்றி. இப்படத்தின் தரத்தை உயர்த்த காரணமாக இருந்த தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் இயக்குனர் இன்னாசி பாண்டியனுக்கும் நன்றி. மேலும் படத்தின் இசையமைப்பாளர் ரான்‌ ஈத்தன்‌ மோஹன்‌, சக நடிகர்கள், டெக்னிஷியன்கள்‌, தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் அயராது உழைப்பு தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

டைரி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில்  உறுதுணையாய் இருந்த உதயநிதி ஸ்டாலின் அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து இரண்டு மாதங்களில் டி பிளாக்‌, தேஜாவூ, டைரி என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியானது எதிர்ச்சியாக நடந்தது. இதில் எந்த ஒரு பிளானும் இல்லை. இந்த மூன்று படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது கூடுதல் சந்தோஷம்.

என் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள்,விநியோகஸ்தர்கள்‌, திரையரங்க உரிமையாளர்கள்‌, சினிமா ரசிகர்கள், ஊடக நண்பர்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது போன்ற சிறந்த படங்களை தொடந்து கொடுக்க உழைப்பேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் அருள்நிதி. 




லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
TN By Election:
TN By Election: "அம்பாசமுத்திரம், பெருந்துறைக்கு மட்டும் இடைத்தேர்தல்.." நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - அப்போ மற்ற 3 தொகுதிகள்?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!
TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Embed widget