Diary Movie : ஓடிடியில் 15 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்த டைரி திரைப்படம்!
இந்நிலையில் ஆஹா ஓடிடியில் வெளியாகி நான்கு நாட்களே ஆன நிலையில் 15 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது டைரி திரைப்படம்.
பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி - பவித்ரா மாரிமுத்து நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டைரி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இது ஒட்டு மொத்த டைரி படக்குழுவினரையும் சந்தோஷத்தில் உற்சாகமாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்பதால் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. இந்த படத்திற்காக அதிகமான விளம்பரமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை அடைந்த திரைப்படம் டைரி. அருள்நிதி ஸ்டாலினுக்கு டிமான்டி காலனி படத்திற்கு பிறகு ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கும் டைரி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியானது.
டைரி திரைப்படத்திற்கு ஐஎம்டிபி ரேட்டிங் 8.2 கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஹா ஓடிடியில் வெளியாகி நான்கு நாட்களே ஆன நிலையில் 15 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது டைரி திரைப்படம்.
Nalla padathukku varaverppu kudukarathukku namma aalungala adichukka mudiyathu!✨🔥
— aha Tamil (@ahatamil) September 26, 2022
We’re super glad to announce that #DiaryOnAHA has completed 15 Mn+ mins on @ahaTamil@arulnithitamil @kathiresan_offl @5starcreationss @RedGiantMovies_ @DoneChannel1 @Theteamoffl pic.twitter.com/AjEqaEKRl5
இந்த செய்தியை கொண்டாடும் வகையில் ஆஹா ஓடிடி தனது டுவிட்டர் பக்கத்தில் " நல்ல திரைப்படத்தை கொண்டாடுவதற்கு நம்ப மக்களை அடித்துக் கொள்ள யாரும் இல்லை " என்று பதிவிட்டு உள்ளனர்.
டைரி திரைப்படம் அருள்நிதியின் திரைப்பட பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்துள்ளது. திரில்லர் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே அருள்நிதி மீது அதித எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. டிமான்டி காலனி திரைப்படத்திற்கு பிறகு தனது தரமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார் அருள்நிதி ஸ்டாலின். அருள் நிதியின் திரைப்பட வாழ்வில் இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.