டார்ஜிலிங்கில் சிக்ஸ் பேக்கில் எக்ஸர்சைஸ்: துருவ் விக்ரம் வீடியோ வைரல்!
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடித்துள்ள 'மகான்' திரைப்படம் அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம் சிக்ஸ் பேக்குடன் மிலிட்டரி கேமஃப்ளாஜ் உடையில் டார்ஜிலிங்கில் உடற்பயிற்சி செய்யும் ஹாட் வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.நடிகர் விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடித்துள்ள 'மகான்' திரைப்படம் அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். படத்தில் ஏகப்பட்ட சஸ்பெண்ட் எலெமண்ட்ஸை சேர்த்திருக்கிறார் இயக்குநர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. மகான் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மகான் படத்தில் விக்ரம் நெகட்டிவ் ரோலில் நடிக்க, சீன கலைகள் அறிந்த காவல்துறை அதிகாரியாக வலம் வந்துள்ளார் அவரது மகன் துருவ் விக்ரம். படத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் விஷயம் இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை என்பதால் மகான் திரைப்படத்தை நம்பியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். இந்த திரைப்படம் சிறந்த கம்பேக்காக அமைய வேண்டும் என்பதே அவரின் எண்ணமாகவும் இருக்கிறது.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.
விக்ரமுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான ஒன்று, மேலும் ‘மகான்’ திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் 60-வது படம் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. ‘சீயான்’ விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என தந்தையையும், மகனையும் ஒன்றாக இப்படத்தில், முதன் முதலாக இயக்கும் வாய்ப்பையும் இந்தத் திரைப்படம் எனக்கு அளித்துள்ளது என அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முன்னதாக தெரிவித்திருந்தார். இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிக்கொணரந்துள்ள இப்படம், ரசிகர்களும், பார்வையாளர்களும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். Amazon Prime Video மூலம் உலகெங்கும் திரையிடப்படும் ‘மகான்’ பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்தார்.