வித்தியாசமான ஹாரர் படமாக உருவாகியுள்ள ஹவுஸ்மேட்ஸ்...முழு விமர்சனம் இதோ
Housemates Movie review : இயக்குநர் T. ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன் , காளி வெங்கட் , அர்ஷா சாந்தினி பைஜூ நடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் T. ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன் , காளி வெங்கட் , அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடிக்க, ஃபேண்டஸி ஹாரர் காமெடி ஜானரில் அசத்தலான எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ஹவுஸ் மேட்ஸ். ஹாரர் , ஃபேண்டஸி கலந்து உருவாகியுள்ள இப்படம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ள ஹவுஸ்மேட்ஸ் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்
ஹவுஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்
நாயகன் கார்த்திக் மற்றும் நாயகி அனுவும் காதலித்து வருகிறார்கள். சொந்த வீடு வாங்கினால் மட்டுமே அனுவை கல்யாணம் செய்து தருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் அனுவின் தந்தை. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த கார்த்தி பாடுபட்டு ஒரு சொந்த வீட்டை வாங்குகிறார். அனுவையும் திருமணம் செய்துகொள்கிறார். அனு கார்த்திக் இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் குடும்ப வாழ்க்கையை தொடங்க இருக்கும் நேரத்தில் தான் கதையில் ட்விஸ்ட் வருகிறது. கார்த்திக் கஷ்டப்பட்டு வாங்கிய இதே வீட்டில் பேய் இருப்பது தெரிவருகிறது. பேய் இருக்கும் இந்த வீட்டை விட்டு கார்த்திக் அனு ஓடினார்களா தங்கள் வீட்டை காப்பாற்றிக்கொள்ள போராடினார்களா என்பது ஹவுஸ் மேட்ஸ் படத்தின் கதை
முதல் பாதி வழக்கமான கமர்சியல் பேய் படங்களுக்கான டெம்பிளேட் உடன் தொடங்கினாலும் இரண்டாம் பாதியில் புதுவிதமான கதையை சொல்கிறார் இயக்குநர். ஹாரர் , காமெடி , உணர்ச்சிவசமான கதை என எல்லா அம்சங்களையும் சரியாக கையாண்டு பார்வையாளர்களை கவர்கிறது ஹவுஸ்மேட்ஸ். டிமாண்டி காலணி படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய டி ராஜவேல் புதுவிதமான ஒரு படத்தை வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு புது விதமான முயற்சியாக ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. ஹாரர் , ஃபேண்டஸி , நகைச்சுவை அம்சங்களை இணைத்து சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. இப்படம். அதே நேரம் கதையில் ஒரு நல்ல எமோஷனல் டச் இருக்கிறது. ஒரு சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் தவறுகள் தெரியாதபடி கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. நடிகர் தர்ஷன் , காளி வெங்கட் , மற்றும் அறிமுக நாயகி அர்ஷா சாந்த்னி பைஜூ சிறப்பாக நடித்துள்ளார்கள்
தர்ஷன் , காளி வெங்கட் , அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ என படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.





















