Vaathi Teaser: வாத்தி கம்மிங் ஒத்து.. நாளை வெளியாகிறது தனுஷின் வாத்தி டீசர்.!
நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கும் ’வாத்தி’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கும் ’வாத்தி’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.
’தி கிரே மேன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும், அப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஹாலிவுட் மீடியாக்களின் கவனம் ஈர்த்துள்ள நடிகர் தனுஷ், முன்னதாக உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார். படத்தில் மிக குறைந்த நேரமே அவர் வந்தாலும், அழுத்தமான நடிப்பை கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
View this post on Instagram
தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், தன் அண்ணன் செல்வராகவன் இயக்கும் ’நானே வருவேன்’ படத்திலும், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப்படம் தொடர்பான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்தப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்