இயக்குநர் வெற்றிமாறனுக்கு அசுரனின் நன்றி கடிதம்..
தனக்கு விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியையும், தனது தாய் , தந்தை , தனது குருவான அண்ணனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் தனுஷ் .
67-வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது, இதில் 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் , மஞ்சு வாரியர் , பசுபதி ,கென் மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் அசுரன் .
தற்பொழுது அசுரன் திரைப்படத்திற்கும் மற்றும் தனுஷிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது , இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி மற்றும் தனது தாய் , தந்தை , தனது குருவான அண்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் .
<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">OM NAMASHIVAAYA 🙏🙏🙏 <a href="https://t.co/XXFo8BDRIO" rel='nofollow'>pic.twitter.com/XXFo8BDRIO</a></p>— Dhanush (@dhanushkraja) <a href="https://twitter.com/dhanushkraja/status/1374213913248628740?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
"வெற்றி, நான் உன்னை பாலு மகேந்திராவின் அலுவலகத்தில் பார்ப்பேன் என்றும், பின்பு உன்னுடன் நட்பு பாராட்டி, எனது துணையாய் எனது அண்ணனாக ஏற்கப் போகிறேன் என்றும் நினைத்ததே இல்லை. நாம் நான்கு படங்கள் ஒன்றாக பணிபுரிந்தோம், இரண்டு படங்கள் உன்னுடன் தயாரித்தேன். சிவசாமியைத் தந்ததற்கு நன்றி. எனக்காக இன்னும் அடுத்து என்ன எழுதியிருக்கிறாய் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் வெற்றி" என்று மிக உருக்கமான கடிதத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் .
தனது துணை நடிகரான மஞ்சு வாரியர் மற்றும் கென் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் தனுஷ் இறுதியாக எனது மிக பெரிய தூண்களான எனது ரசிகர்களுக்கு நன்றி. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று தனது கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .