மேலும் அறிய

Dhanush Praise Vishnu Vishal: “ராட்சசன விட இதுல வேற லெவல் மிரட்டல்...” விஷ்ணு விஷாலை புகழ்ந்த நடிகர் தனுஷ்...!

படத்தை பார்த்து விட்டு தனுஷ் பாராட்டியதாக விஷ்ணு விஷால் பேசியுள்ளார்.

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”. நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. 

பாராட்டிய தனுஷ் 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “ எனக்கு எமோஷனல் தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது, அவருக்கு நன்றி. 

Dhanush Praise Vishnu Vishal: “ராட்சசன விட இதுல வேற லெவல் மிரட்டல்...” விஷ்ணு விஷாலை புகழ்ந்த நடிகர் தனுஷ்...!

மனுவை சந்தித்த போது நான் நிறைய படம் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ராட்சசன் படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதை சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது. எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் வளர்ந்த விதம் வேறு, ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன். இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது. மனுக்காக இந்தப் படம் செய்தேன். நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார்,  ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 

உதய் அண்ணா, செண்பகமூர்த்தி சாருக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றி சொன்னாலும் பத்தாது, இப்போது இந்தப் படத்திற்காக சொல்லவில்லை,  குள்ளநரி கூட்டம் படத்தையே அவர்கள் தான் ரிலீஸ் செய்து தந்தார்கள், எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்,  இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. 

நடிகை மஞ்சிமா மோகன் 

எங்கள் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸிக்கு நன்றி. இந்தப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கியிருக்கிறோம், பூர்த்தி மிகச்சிறப்பாக ஸ்டைலீஷ் செய்துள்ளார் ஒரு படத்திற்கு மிக முக்கியம் கதாப்பாத்திரத்தின் ஸ்டைல் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் அனைவரும் ஹீரோ ஹீரோயினாக இல்லாமல் படத்தில் எல்லோரும் கதாபாத்திரங்களாக வந்துள்ளார்கள். விஷ்ணு தயாரிப்பாளராக நடிகராக இரண்டு வேலை பார்த்தார். அவரது பொறுமை என்னை பிரமிக்க வைத்தது. படம் அருமையாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget