Raayan: வட சென்னையில் வசிக்கும் சகோதரர்களின் கதை: தனுஷின் ராயன் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
Raayan Movie: தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தின் படக்குழு பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
தனுஷின் 50ஆவது படமான ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் படக்குழுவில் யார் யார் இணைந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ராயன்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரின் முடிவடைந்தது. தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடித்துள்ளார் தனுஷ்.
இப்படத்தில் தனுஷூடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளும், ஒளிப்பதிவு ஓம் பிரகாஷூம் , கலை இயக்குநராக ஜாக்கியும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். தனுஷ் முன்னதாக இயக்கிய பவர் பாண்டி படம் ஒரு ஃபீல் குட் படமாக இருந்த நிலையில், இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது. தமிழ். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
#D50 is #Raayan 🔥
— Sun Pictures (@sunpictures) February 19, 2024
🎬 Written & Directed by @dhanushkraja
🎵 Music by @arrahman
Releasing in Tamil | Telugu | Hindi@omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss #D50FirstLook pic.twitter.com/vfemOIRKIX
கதை என்னவாக இருக்கலாம்?
வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் இதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தனுஷ் படம் என்றால் அதற்கு அனிருத் இசையமைப்பது வழக்கம். ஆனால் தனுஷ் இயக்கும் இரண்டு படங்களுக்கு அனிருத் இசையமைக்காதது தனுஷின் முடிவாக இருக்கலாம். தனுஷ்ம்முன்னதாக நடித்த மரியான் மற்றும் இந்தியில் வெளியான ராஞ்சனா உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களில் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. தற்போது இப்படத்திற்கு ரஹ்மானின் இசை கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் வளர்ந்து வரும் நடிகர்களான காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இப்படத்தில் நடித்துள்ளதும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க : 24 Years of Mugavaree: 24 ஆண்டுகளை கடந்த முகவரி .. நெகிழ்ச்சியாக பதிவிட்ட இயக்குநர் வி.இசட்.துரை!
Lover Deleted Scene: காதலை சொன்ன நடிகர் மணிகண்டன்.. லவ்வர் படத்தின் டெலிட்டட் காட்சி வெளியீடு!