Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!
நடிகர் தனுஷ் எடுத்த முடிவால், ரஜினியாகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தலைவர் உட்பட மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'ராயன்' வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் தனுஷின் 50ஆவது படமாக வெளியான நிலையில், சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தனுஷை வெற்றிப்பட இயக்குனராக மாற்றியது.
இந்தப் படத்தில் தனுஷ் நடித்த காத்தவராயன் கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷான் நடிக்க இருந்தார். ஆனால், கடைசியில் தனுஷே அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் தன்னுடைய மகன் யாத்ராவை நடிக்க வைப்பதாக இருந்துள்ளது. ஆனால், அது சரியாக அமையவில்லையாம். தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா படம் உருவாகி இருக்கிறது. இதே போன்று தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்' என்ற படமும் வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து இட்லி கடை படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் நடிகர் தனுஷே இயக்கி நடிக்கிறார். இது தனுஷ் இயக்கி நடிக்கும் நான்காவது படமாகும். இதற்க்கு முன், தனுஷ் பா பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் ஆகிய 3 படங்களை இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமே இருந்து, குறுகிய வட்டத்திற்க்குள் தன்னை சுருக்கி கொள்ளாதவர் தனுஷ். இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக அறியப்படும் தனுஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
தன்னுடைய மகனை ஒரு நடிகராக்க வேண்டும் என ஆசைப்படும் தனுஷ், கூடிய விரைவில் மூத்த மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகம் செய்ய தயாராகி உள்ளார். சில கதைகளை மகனுக்காக இவர் கேட்டு வருவது மட்டும் இன்றி, தானே ஒரு சிறப்பான கதையை தயார் செய்தும் வைத்துள்ளாராம். ஐஸ்வர்யா இதுவரை மகன் நடிகராக மாறுவதற்கு எந்த ஒரு தடையும் சொல்லாத நிலையில், ரஜினிகாந்தும் உன் விருப்பம் போல் செய் என பேரனின் ஆசைக்கு பச்சை கொடி காட்டிவிட்டாராம். எனவே, ரஜினிகாந்தின் குடும்பமும் தனுஷின் இந்த முடிவால் சந்தோஷத்தில் உள்ளதாகவே கூறப்படுகிறது.