மேலும் அறிய

Deepika Padukone: அம்மாவாக போகிறாரா தீபிகா படுகோன்? பளபளன்னு புடவையில் தோன்றியதன் பின்னணி இதுதானா?

Deepika Padukone: தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் அவர்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான லவ்லி ஜோடிகள் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி. இவர்கள் இருவரும் முதன் முதலில் சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியன் கி ராஸ்லீலா ராம்-லீலா படத்தில் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் படத்தில் ஜோடி சேர்ந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து இருவரும் ஆறு வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் 2018ம் ஆண்டு இத்தாலியின் லேக் கோமோவில் அசத்தலாக திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் ஐந்தாவது ஆண்டு திருமண விழாவை பெல்ஜியத்தில் கொண்டாடினர். 

குழந்தைகளுக்கு எதிர்பார்ப்பு:

சமீபத்தில் தீபிகா படுகோன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் பேசுகையில் ரன்வீருக்கு தனக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எங்களுக்கான ஒரு குடும்பத்தை தொடங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என கூறி  இருந்தார். 

Deepika Padukone: அம்மாவாக போகிறாரா தீபிகா படுகோன்? பளபளன்னு புடவையில் தோன்றியதன் பின்னணி இதுதானா?

மேலும் அவரின் குடும்பத்தினர் பற்றி அவர் பேசுகையில் "என்னை வளர்த்த என்னுடைய அத்தை, மாமா மற்றும் குடும்ப நண்பர்கள் அனைவருமே நான் அப்படியே இருக்கிறேன். சிறிதும் மாறவே இல்லை என கூறுவார்கள். தொழிலில் பணம், புகழ், பெயரை சம்பாதித்த பிறகு ஒருவர் மாறி விடுவது என்பது எளிது. ஆனால் என்னுடைய வீட்டில் என்னை யாருமே ஒரு பிரபலத்தை நடத்துவது போலவே நடத்த மாட்டார்கள்.

முதலில் நான் என் பெற்றோருக்கு மகள், உடன்பிறந்தவர்களுக்கு ஒரு சகோதரி. அது என்றுமே மாறுவதை நான் விரும்பவில்லை. எங்களின் குடும்பம் எங்களை அடித்தளமாக வைத்திருக்கிறது. ரன்வீரும் நானும் எங்களுடைய குழந்தைகளை அதே மதிப்புடன் தான் வளர்ப்போம் என நம்புகிறோம். 

தீபிகா படுகோனா கர்ப்பமா?

அந்த வகையில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் அவர்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. தீபிகா இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்ப காலத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற 77 வது பாஃப்டா சர்வதேச விருது வழங்கும் விழாவின் ரெட் கார்பெட்டில் கலந்து கொண்ட போது தீபிகா தன்னுடைய வயிற்று பகுதியை மறைப்பது போல பளபளப்பான புடவையில் தோன்றியிருந்ததால் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Deepika Padukone: அம்மாவாக போகிறாரா தீபிகா படுகோன்? பளபளன்னு புடவையில் தோன்றியதன் பின்னணி இதுதானா?

சமீபத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரில்லர் ஜானர் படமான 'ஃபைட்டர்' படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக தீபிகா நடித்திருந்தார். அனில் கபூர், கரண் சிங் குரோவர் மற்றும் அக்ஷய் ஓபராய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் வரலாற்று படமான கல்கி 2898 AD படத்தில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வரும் மே 9ம் தேதி வெளியாக உள்ளது. 

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் போலீஸ் கேரக்டரில் சிங்கம் அகைன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தீபிகா, அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், அர்ஜுன் கபூர் மற்றும் கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. அதை தவிர ரன்வீர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் டான் 3 படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget