புடவையை கட்டினா குள்ளமா தெரியும்.. டிடி என்ன சொன்னார் தெரியுமா?
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பார்டர் வைத்த புடவையை கட்டினால் குட்டையாக தெரிவாய் சிலர் சொன்னதாக தொகுப்பாளினி டிடி குறிப்பிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பார்டர் வைத்த புடவையை கட்டினால் குட்டையாக தெரிவாய் சிலர் சொன்னதாக தொகுப்பாளினி டிடி குறிப்பிட்டுள்ளார்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
இந்தப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இவர்களுடன் படத்தில் நடித்த பிரபலங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமல்லாது திரையுலத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியும் மற்றும் புட் சட்னி பிரபலம் ராஜ்மோகனும் தொகுத்து வழங்கினர்.
View this post on Instagram
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் தன்னை பார்டர் வைத்த புடவையை அணியவேண்டாம் என்று சிலர் சொன்னதாக டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்டு இருக்கும் பதிவில், “ இசை வெளியீட்டு விழாவில் என்னை பெரிய பார்டர் வைத்த புடவையை அணியாதீர்கள். நீங்கள் குட்டையாக தெரிவீர்கள் என்றனர்.
இவற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் என்னிடம் பரவாயில்லை டிடி.. உனக்கு பிடித்திருந்தால் நீ கட்டிக்கொள். உன்னுடைய மூளைக்குள் என்ன இருக்கிறது, உன்னுடைய பழக்கவழக்கங்கள், உன்னுடைய வார்த்தைகள் தான் உன்னை உயர்வாக காட்டும் உன்னுடைய உயரம் அல்ல.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.