Watch Video: புஷ்பா போயாச்சு பதான் வந்தாச்சு... ஷாருக்கானாக மாறிய டேவிட் வார்னர்... லைக்ஸ் பறக்கவிடும் நெட்டிசன்கள்!
தற்போது பதான் பட ஷாருக்கான் கதாபாத்திரத்தில் தன் முகத்தை பொருத்தி எடிட் செய்யப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து வைரலாகியுள்ளார் டேவிட் வார்னர்.

பொதுவாகவே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டேவிட் வார்னர். என்னய்யா இவ்வளவு பெரிய மனுஷன் இப்படி குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்கார் என்று சொல்லும் அளவுக்கு சமூக வலைதளங்களில் அவரது செயல்பாடுகள் இருக்கும்.
ஆனாலும் அவரின் க்யூட் செய்கைகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் அடிக்கடி ஏதாவது சுவாரஸ்யமான பாட்டுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார் டேவிட் வார்னர்.
குறிப்பாக இந்தியர்களிடையே கிரிக்கெட்டர் என்பதைத் தாண்டி இந்திய சினிமாவின் அதி தீவிர ரசிகராகவே டேவிட் வார்னர் கடந்த சில ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறார். மேலும் அதற்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.
டோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை இந்தியப் படங்களுக்கும் பாடல்களுக்கும் தீவிர விசிறியாக விளங்கும் டேவிட் வார்னர், நடிகர் அல்லு அர்ஜூனின் பெரும் ரசிகராய் உருவெடுத்தார்.
அதிலும் புஷ்பா பட பாடல்களுக்கு அவர் தன் புகைப்படத்தைப் பொருத்தி பகிர்ந்த வீடியோக்கள் நெட்டிசன்களை சிரிக்க வைத்து இதயங்களை வென்றன.
View this post on Instagram
அந்த வகையில் தற்போது பதான் பட ஷாருக்கான் கதாபாத்திரத்தில் தன் முகத்தை பொருத்தி எடிட் செய்யப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து வைரலாகியுள்ளார் டேவிட் வார்னர்.
ரத்தம் சொட்ட 8 பேக்ஸில் போஸ் கொடுப்பது, புல்லட்டில் சென்று வெடிகுண்டு வீசுவது உள்பட பதான் ஷாருக்கானின் வீடியோவில் தன்னைப் பொருத்தி பதிவிட்டுள்ளதுடன், என்ன ஒரு படம் எனவும் படத்தைப் புகழ்ந்துள்ளார் டேவிட் வார்னர்.
இந்நிலையில், ”வார்னர் இந்தியாவின் மீது பைத்தியமாகியுள்ளார், யாராவது இவருக்கு இந்திய குடியுரிமை வழங்குங்கள்” என்றும், ”ஆஸ்கார் நாமினேஷன் வந்துகொண்டிருக்கிறது” என்றும் உற்சாகமாக வார்னருக்கு கமெண்ட் செய்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
பதான் படம்
ஜன.25 வெளியான பதான் படம் ஷாருக்கானுக்கு சிறப்பான கம் பேக் படமாக அமைந்து மூன்றே நாள்களில் உலகம் முழுவதும் 313 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் முதல் மூன்று நாள்களில் இதுவரை அதிகம் வசூலித்த இந்தி படம் என்னும் சாதனையையும் புரிந்து கேஜிஎஃப் பட ரெக்கார்டையும் முறியடித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் முதல் நாளில் 70 கோடி வசூலித்த முதல் படம் எனும் சாதனையையும் பதான் படம் படைத்துள்ளது.
இந்நிலையில், குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் இப்படம் வெளியான நிலையில், தொடர்ச்சியாக வார இறுதியும் சேர்த்து ஐந்து நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூலில் படம் இன்னும் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'பதான்' படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.





















