மேலும் அறிய

Dasara OTT Release: மாஸ் ஹிட் அடித்த நானியின் ‘தசரா’..! ஓ.டி.டி.யில் ரிலீஸ் எப்போது..?

திரையரங்கில் ஹிட் அடித்த தசரா படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நானி நடிப்பில் வெளியான தசரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தசரா:

புதுமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரிணா வஹாப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் தசரா. சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தைச் சுற்றி நிகழும் கதையாக வடிவமைக்கப்பட்ட தசரா திரைப்படம் சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றது.

கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியான தசரா திரைப்படம், தெலுங்கு தாண்டி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. தமிழில் விடுதலை, பத்து தல படங்களுடன் ஒன்றாக ரிலீசான தசரா திரைப்படம்,  சுமார் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான நிலையில், ஒரு வார காலத்தில் 100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்து அசத்தியது.

குவிந்த வசூல்:

புஷ்பா படமும், கேஜிஃப் கதைக்களமும் இணைந்து உருவாகியிருப்பதாக ஒரு புறம் விமர்சனங்கள் வந்தாலும் மறுபுறம் படம் பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவித்து மாஸ் காட்டியது. குறிப்பாக சந்தோஷ் நாராயணினில் இசையில் மைனரு வேட்டி கட்டி, தூம் தாம் கூத்து பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளின. இன்ஸ்டா ரீல்களை ஆக்கிரமித்து வைரலாகின.

இந்நிலையில் திரையரங்கில் ஹிட் அடித்த தசரா படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நானி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நடிகர் நானி தரணி எனும் கதாப்பாத்திரத்திலும், கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்த நிலையில், சுவரில் வரையப்பட்ட சில்க் ஸ்மிதா ஓவியம் படத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடுமையான படப்பிடிப்பு:

முன்னதாக தசரா படம் குறித்து மனம் திறந்த நடிகர் நானி,  “தசரா படம் எனக்கு மிகவும் புதுமையான அனுபவத்தை தந்தது. டிசம்பர் மாதத்தில், எட்டு டிகிரி குளிரில் எல்லாம் ஷூட்டிங் நடந்துள்ளது.

அப்போது என்னை சுற்றியுள்ள அனைவரும் குளிருக்கு அடக்கமாக ஜாக்கெட், மஃப்ளர் எல்லாம் அணிந்து கொண்டிருப்பார்கள். நான் மட்டும் ஒரு பனியன்-லுங்கி அணிந்து கொண்டிருப்பேன். அந்த குளிரில் நடித்தது மிகவும் கஷ்டமா இருந்தது” எனப் பேசியிருந்தார்.

தனது 30ஆவது படத்துக்கான பணிகளில் நானி பிஸியாக ஈடுபட்டுள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்தது. நடிகை மிருணாள் தாக்கூர் நானிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் விஜய்: எந்த ஊர் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Train Cancel: ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Train Cancel: ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
Embed widget