சூரியின் இருண்ட பக்கங்கள்; விஷ்ணு விஷால்
சூரியின் இருண்ட பக்கங்களை வெளியிட வேண்டியிருக்கும் என விஷ்ணு விஷால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அவர் மீதும், அவர் தந்தை மீதும் நடிகர் சூரி அளித்த நில மோசடி புகார் குறித்து கேள்வியில் எரிச்சலான அவர், சூரியை கடுமையாக சாடினார்.
அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை என்று துவக்கத்தில் பதிலளித்த விஷ்ணு விஷால், பின்னர் செய்தியாளர்கள் அடுத்தடுத்து எழுப்பிய கேள்வியை தொடர்ந்து, ‛எனக்கும் என் தந்தைக்கும் அந்த புகாரில் எந்த தொடர்பும் இல்லை; சூரியின் ஒவ்வொரு புகாருக்கும் என்னால் விளக்கம் தர முடியும் என்று கூறிய விஷ்ணு விஷால்,
அதன் பின் சூரியின் இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும்,’ என எரிச்சலடைந்த விஷ்ணு விஷால், சில ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையின் காலில் விழுந்து வணங்கி நீங்கள் தான் என் கடவுள் என்று சொன்ன ஒருவர் , தற்போது எங்கள் மீது புகார் அளித்துள்ளார் என்றும், சூரியை யாரோ தவறாக வழிநடத்துவதாகவும், உண்மை தெரியவரும் போது அவர் எங்களை புரிந்து கொள்வார் என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.