Bigg Boss 7: பிக்பாஸ் வீட்டில் நுழைந்த டான்சர் மணி சந்திரா.. வந்தவுடன் கிடைத்த சர்ப்ரைஸ்!
பிக் பாஸ் வீட்டினுள் 7ஆவது போட்டியாளராக நுழைந்த டான்சர் மணி சந்திராவுக்கு பிக்பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் சென்ற நிலையில், இளம் டான்ஸரான மணி சந்திரா 7 -வது போட்டியாளராக களம் கண்டார். அவர் வீட்டிற்குள் நுழைந்ததும், பிக் பாஸ், மணி சந்திரா, நீங்க தான் இந்த வார கேப்டன் என கூறி மணி சந்திராவுக்கு ஷாக் கொடுத்தார்.
லவ்வர் பாய் மணி சந்திரா?
இதற்கு முன் பல பிக்பாஸ் சீசன்களில் காதல் ட்ராக் இருந்த நிலையில், காதல் ட்ராக்கை மூவ் செய்வதற்காகவே இந்த சீசனுக்கு மணி சந்திராவை அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் லவ்வர் பாய் என்றால்? இவர் காதலிக்க போகும் பெண் யார் என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வி? மணி சந்திராவுக்கும் சீரியல் நடிகை ரவீணா தஹாவுக்கும் இடையே தான் காதல் வரும் என்பது தான் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய உடன் இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் கமெண்ட்ஸ்.
பிக் பாஸ் சீசனிலேயே மிகவும் பிரபலமாக பேசப்பட்டது ஓவியா- ஆரவ் காதல் ட்ராக் தான். இதில் ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தம் பெரிதாக பேசப்பட்டது. அதுபோன்று இந்த சீசன் லவ் ட்ராக்கில் என்ன என்ன விஷயங்கள் நடக்கும் என்று ரசிகர்கள் இன்றையிலிருந்து எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மிகவும் எதிர்பார்ப்பு:
குறிப்பாக இளம் மணி சந்திரா பிக் பாஸ் நிகழ்ச்சி தன் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இது தன்னை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையிலும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மணி சந்திரா பிக்பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொள்கிறார். போட்டிகளில் ஜெயிக்கிறா? ரசிகர்களின் வாக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தான் ஒரு போட்டியாளர் வீட்டில் இருக்கும் நாட்களை தீர்மானிக்கிறது.
எனவே மணி சந்திரா இந்த பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் எப்படி நடந்து கொள்வார்?. பார்வையாளர்களை எப்படி எண்டெர்டெயின் செய்வார்? ஹவுஸ் மேட்ஸ் மனதில் இடம் பிடிப்பாரா? எத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நீடிப்பார் என்பதையும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க
Vinusha Devi: பிக்பாஸ் போட்டியில் களம் கண்ட ”பாரதி கண்ணம்மா” வினுஷா தேவி.. ஜொலிப்பாரா?.. சோதிப்பாரா?