Jani Master : ஜானி மாஸ்டரை துரத்தியதா நடன இயக்குநர் சங்கம்...?
பாலியல் குற்றச்சாட்டில் சிறை சென்ற பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஜானி மாஸ்டர்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர் . சக பெண் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி பெங்களூர் போலீஸால் கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். உடன் பணிபுரிந்த பெண் துணை நடன இயக்குநரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் அடிப்படையில் காவல் துறை அவரை கைது செய்தது. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்றுக் கொள்ள அவருக்கு நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் ஜாமின் வழங்கியது கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.
தற்போது ஜானி மாஸ்டரை நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின. இந்த தகவலை மறுத்து ஜானி மாஸ்டர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். " நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து என்னை நிரந்தரமாக நீக்கியுள்ளதாக ஒரு தவறான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. என்னை யாரும் நீக்கவில்லை. திறமையுள்ளவர்களை பணியாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. நான் பணியாற்றிய கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ஒரு பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. " என ஜானி மாஸ்டர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
నిర్ధారణవ్వని ఆరోపణలని కారణంగా చూపిస్తూ నన్ను శాశ్వతంగా యూనియన్ నుండి తొలగించినట్టు మీడియాలో పుకార్లు పుట్టిస్తున్నారు. అవేవీ నమ్మకండి!!
— Jani Master (@AlwaysJani) December 9, 2024
నా పదవీ కాలం ఇంకా ఉన్నా కూడా అనధికారికంగా, అనైతికంగా ఎలక్షన్లు నిర్వహించి వారికి వారే నిర్ణయాలు, హోదాలు తీసుకునే హక్కు ఎవరికీ లేదు. దీనికి… pic.twitter.com/qroJxE5Uxv
ஜானி மாஸ்டர் பற்றி பெண் அளித்த புகாரில் படப்பிடிப்பு தளத்தில் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த நிகழ்வு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனக்கு இப்போது 21 வயது என்றும் தான் மைனராக இருந்தபோதே தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே திருமணமான ஜானி மாஸ்டர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை மதமாற்றம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் 376, 506 மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.