Nagarjuna :சொல்லவே இல்ல! என்னது நம்ம சீக்காவோட கிளாஸ்மேட் பிரபல நடிகரா? ரசிகர்கள் ஆச்சரியம்
முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கிருணமாச்சாரி ஸ்ரீகாந்த் பிரபல நடிகர் ஒருவரின் கிளாஸ்மேட் என்பதை அவரே கூறியுள்ளார்.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
1983 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் விளையாடியவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். ரசிகர்களால் செல்லமாக சீக்கா என்று அழைக்கப்படுகிறார். அடிதடியான ஓப்பனிங் ஆட்டக்காரராக இருந்த சீக்கா இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வுகு குழுவில் சேர்மேனாக இருந்துள்ளார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். மூக்கு மேல காலி , டேய் மச்சா , டப்பா பெளலர் என அடிக்கடி தனது கருத்துக்களுக்காக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
நாகர்ஜூனாவின் கிளாஸ்மேட்
என்னது Cheeka-வும், Nagarjuna-வும் classmates-ஆ.... 😧
— Star Sports Tamil (@StarSportsTamil) May 6, 2024
அதிர்ச்சியில் Sadagoppan Ramesh 😅
📺 தொடர்ந்து காணுங்கள் | TATA IPL 2024 | Mumbai vs Hyderabad | Star Sports தமிழில்#IPLOnStar #RevengeWeekOnStar @KrisSrikkanth @Bhavna__B pic.twitter.com/HdTRdIlFUa
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீக்கா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும் தானும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்று ஆச்சரியாமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதை கேட்ட சடகோபன் ரமேஷ் நீங்க நாகர்ஜூனாவுக்கு சித்தப்பா மாதிரி இருக்கீங்க நீங்க எப்படி அவருக்கு கிளாஸ்மேட் என்று என்னால் நம்ப முடியவில்லை என்று அவரை கிண்டல் அடிக்கிறார்.
தனுஷூடன் இணைந்துள்ள நாகர்ஜூனா
தமிழில் ரட்சகன் படத்தின் மூலம் அறிமுகமாகிய நாகர்ஜூனா தற்போது தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் நாகர்ஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது.