மேலும் அறிய

Baba Aparajith Marriage : கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்தை மணக்கும் பிரபல நடிகரின் மகள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..வைரலாகும் போட்டோ!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபராஜித் தனது 17 வயதில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமானார். 2012ல் ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார்

கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள்  திருமணம் செய்ய உள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபராஜித் தனது 17 வயதில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனைத் தொடர்ந்து 2013-14 துலீப் டிராபியில் மேற்கு மண்டலத்திற்கு எதிராக தென் மண்டல அணியில் களம் கண்ட அபராஜித் இரட்டை சதம் விளாசி அசத்தினார். தற்போது இந்திய ஏ அணியில் விளையாடி வரும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். 

சமீபத்தில் பாபா அபராஜித்திற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் என்ன இருக்கிறது என நினைத்தால் மணப்பெண், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தலைவாசல் விஜய்யின் மகள் தான் என்பது ஸ்பெஷலான தகவல். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by J A Y A V E E N A (@jayaveena_vijayakumar)

செல்வா இயக்கிய தலைவாசல் படத்தின் மூலம் அறிமுகமான விஜய், இன்றளவும் தலைவாசல் விஜய் ஆகவே அழைக்கப்படுகிறார். காமெடி, வில்லன், குணச்சத்திரம் என பலவிதமான கேரக்டரில் அவர் நடித்துள்ளார். அவரது சினிமா கேரியரில் தேவர் மகன், மகளிர் மட்டும், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, சிம்ம ராசி, கண்ணுக்குள் நிலவு, வல்லரசு, வாஞ்சிநாதன், அபியும் நானும், உன்னை நினைத்து, பகவதி, அருள், சண்டக்கோழி, பீமா, அறை எண் 305ல் கடவுள், ஜே ஜே, சிங்கம் 2, பூஜை உள்ளிட்ட பல படங்களில்  தனது நடிப்புக்கு பாராட்டை பெற்றார். 

அவரது மூத்த மகளான  ஜெயவீணாவை தான் அபராஜித் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். நீச்சல் வீராங்கனையான ஜெயவீணா, அந்த துறையில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் திருமண நிச்சயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மணமக்கள் இருவரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அபராஜித் - ஜெயவீணா ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget