Cool Suresh : வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ்க்கு ஒரு எண்ட்ரிய போடு... சிம்பு எடுத்த அதிரடி முடிவு!
சமீபத்தில் கூல் சுரேஷ் ஒரு நேர்காணலில் படங்களில் நடிப்பதற்கு தற்போது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மன வருத்தத்தோடு கூறியிருந்தார்.
வெந்து தணிந்தது காடு படம் ரிலீசான நிலையில், அப்படத்தின் ஹீரோ சிலம்பரசன் நடிகர் கூல் சுரேஷூக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று தியேட்டர்களில் வெளியானது.
இதையடுத்து , கடந்த ஒரு வருடமாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான பிரமோஷனை மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர் தான் கூல் சுரேஷ் . தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் படம் பார்த்து விட்டு வெளியானவுடன் "வெந்து தணிந்தது காடு எஸ்டிஆர்-க்கு வணக்கத்தை போடு" என்றும் சிம்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வந்தார்.
பின்னர் ரசிகர்களை படம் பார்த்து விட்டு எப்படி இருக்கு என சொல்லுமாறு தெரிவித்த சிம்பு, இந்நேரத்தில் கூல் சுரேஷூக்கு மனதார நன்றி தெரிவிப்பதாக கூறினார். காரணம் அவர் தான் எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு.சிம்புவுக்கு வணக்கத்த போடு என படத்தின் பெயரை சொல்லி சொல்லி ப்ரோமோஷன் செய்தார் என தெரிவித்தார். இதேபோல் நடிகை சித்தி இதானியும் படத்தின் புரோமோஷனுக்கு அவர் செய்யும் பணி மிகச்சிறப்பானது என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
அப்படி வெந்து தணிந்தது காடு படத்தை முலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்ந்தவர்களில் ஒருவர் கூல் சுரேஷ். இவர் சில நாட்களுக்கு தனக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைவில்லை என்று கூறி வேதனை பட்டார்.
இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைத்துள்ளாராம் சிம்பு. என கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதன்முலம் நடிக்க ஏங்கி கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.