''பெண்களை கூட வளர்த்திடலாம் - ஆனால் அவர்களின் முடியை..'' குக் வித் கோமாளி கனி பகிர்ந்த வீடியோ!
பெண்களை விட அவங்க முடியினை வளர்ப்பது தான் ரொம்ப கஷ்டம் என கேப்ஷனுடன் குக் வித் கோமாளி கனி பதிவிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
காரக்குழம்பு என்றால் குக்வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வந்த கனி அக்கா தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னை பிரபலப்படுத்திக்கொண்டுள்ளார் கனி. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் காரக்குழம்பு கனி என நக்கல் செய்ததையும் யாராலும் மறக்க முடியாது. தன்னுடைய சமையல் திறனின் மூலம் அனைவரின் மனதில் இடம் பெற்றது மட்டுமில்லாமல் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார் கனி.
View this post on Instagram
மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் பட்டாளத்தைக்கொண்டுள்ள குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி முடிவுற்றதை தொடர்ந்து எப்பொழுது அடுத்த சீசன் தொடங்கும் என ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தான் குக் வித் கோமாளி சீசன் 3 அடுத்த 3 மாதங்களில் தொடங்கும் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் குக் மற்றும் கோமாளிகள் இன்ஸ்டகிராம், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களை எப்பொழுதும் ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வதோடு, ரசிகர்களிடம் பேசி வருகின்றனர்.
இந்த வரிசையில், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருபவர் தான் குக் வித் கோமாளி சீசன் 2 வின் டைட்டில் வின்னரும், இயக்குநர் திருவின் மனைவியுமான கனி. பொன்னியின் செல்வன் கதையினை youtube ல் மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் படி தெரிவித்து வருகிறார். இதோடு குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்தவுடன் நிகழ்ச்சியில் என்னென்ன புதிய டிஸ்களை செய்தாரோ? அதனையெல்லாம் youtube ல் சமையல் வீடியோவாக பதிவிட்டு வருகிறார் கனி. மேலும் அவ்வப்போது தனது இரு பெண் குழந்தைகளுடன் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவினை கனி வெளியிடுவது வழக்கம்.
அந்த வரிசையில் தான் கனி தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கனியின் மகள் ஸ்டைலாக தனது முடியினை காட்டியிருப்பார். மேலும் இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக “பெண்ணை வளர்ப்பதைவிட அந்த பெண்ணோட முடியினை வளர்ப்பது தான் ரொம்ப கஷ்டம் “என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டகிராமில் வைரலாகி வருவதோடு உங்க கேப்சன் வேற லெவல் அக்கா, இதே நிலை தான் எங்க வீட்டிலையும் என்பது போன்ற கமெண்டுகளை கனியின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.