Cook With comali 3: நிகழ்ச்சியில் எல்லோரையும் அடிப்பது ஏன்? - குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் விளக்கம்
நிகழ்ச்சியின்போது போட்டியாளர்களை விளையாட்டிற்குதான் அடிக்கிறேன். தப்பாக எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் - வெங்கட் பட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் புகழ்பெற்றது ’குக் வித் கோமாளி என்பதும் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் மிகப்பெரிய அளவில் பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் சிலர் வரவேற்பை பெற்றனர். அதில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ் அஜித்தின் 'வலிமை', விஜய்யின் 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதேபோன்று அஸ்வின் குமார் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் சிவாங்கியும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டான் படத்தில் நடித்துள்ளார். இதனால் குக் வித் கோமாளி மீது சின்னத்திரை பிரபலங்களின் பார்வை தற்போது தீவிரமாக படர ஆரம்பித்திருக்கிறது.
இது குக்கு வித் கோமாளி.. முடிஞ்சா சிரிக்காம சமாளி.. 😍 #CookWithComali Season 3 - விரைவில்.. நம்ம விஜய் டிவில.. #CWC #VijayTelevision pic.twitter.com/N435Y0w91X
— Vijay Television (@vijaytelevision) January 10, 2022
இந்த சூழலில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ஜனவரி 22ஆம் தேதியிலிருந்து ஆரம்பமானது. இந்த சீசனில், பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி , ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் நடித்த அம்மு அபிராமி, காமெடி நடிகை வித்யுலேகா ராமன், கனா உள்ளிட்ட படங்களில் நடித்த தர்ஷன், நடிகரும் இயக்குனருமான மனோபாலா, கருணாஸின் மனைவி கிரேஸ், சார்ப்பட்டா பரம்பரையில் நடித்த சந்தோஷ் பிரதாப், பாடகர் அந்தோணிதாசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், செப் வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிப்பது முகம் சுளிக்க வைப்பதாக சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்கள் வந்தன. அது குறித்து பேசிய வெங்கடேஷ், “நிகழ்ச்சியின்போது போட்டியாளர்களை விளையாட்டிற்குதான் அடிக்கிறேன். தப்பாக எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த போட்டியில் யாரையும் HURT செய்யவில்லை. இவை எல்லாமே ரசிகர்களை சிரிக்க வைக்கத்தான்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Republic Day 2022 : டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம் நாத் கோவிந்த்.. பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு