![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Republic Day 2022 : டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம் நாத் கோவிந்த்.. பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு
கொடி ஏற்றிய பிறகு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், வீர தீரச் செயலுக்கான சவுரியா சக்ரா விருதுகளை டெல்லியில் வழங்கி வருகிறார்.
![Republic Day 2022 : டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம் நாத் கோவிந்த்.. பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு Republic Day 2022 India 26 January The national flag was hoisted by President Ram Nath Govind Republic Day 2022 : டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம் நாத் கோவிந்த்.. பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/26/cbfa087f0b73f61fb3ca758b502a6e70_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
73 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
#BREAKING | டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் https://t.co/wupaoCzH82 | #happyrepublicday2022 #RepublicDay2022 #RepublicDayIndia pic.twitter.com/hPYLj4DCNF
— ABP Nadu (@abpnadu) January 26, 2022
கொடி ஏற்றிய பிறகு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், வீர தீரச் செயலுக்கான சவுரியா சக்ரா விருதுகளை டெல்லியில் வழங்கி வருகிறார். ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார். இந்த விருதினை ஏஎஸ்ஐ பாபுவின் மனைவி ரினா ராணி, மகன் மாணிக் பெற்றுக்கொண்டனர்.
#RepublicDayParade | குடியரசு தின அணிவகுப்பில் முதலாவதாக குதிரைப் படையின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதைhttps://t.co/wupaoCzH82 | #happyrepublicday2022 #RepublicDay2022 #RepublicDayIndia pic.twitter.com/EquzHATqOo
— ABP Nadu (@abpnadu) January 26, 2022
அசோக் சக்ரா என்பது நாட்டின் மிக உயர்ந்த அமைதி கால வீரிய விருதாகும். ஆகஸ்ட் 29, 2020 அன்று ஸ்ரீநகரில் ஒரு நடவடிக்கையின் போது பாபு ராம் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் ஜேகேபியின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பாபு ராமுக்கு குடியரசுத் தலைவரால் இந்த சிறந்த கேலண்ட்ரி விருது அங்கீகரிக்கப்பட்டது.
குடியரசு தின விழாவை நேரலையில் காண :
Republic day LIVE 2022 | கொடியேற்றும் ஜனாதிபதி.. டெல்லி ராஜவீதியிலிருந்து நேரலை! https://t.co/cX9uvLMPhp
— ABP Nadu (@abpnadu) January 26, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)