மேலும் அறிய

Dharsha gupta | தனி வீடு.. இலவச உணவு.. 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லாக்டவுன் உதவி!

சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா சாலையோர மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக இலவசமாக உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு ஏற்கெனவே அமலில் இருந்த ஊரடங்கை, கடந்த 24-ந் தேதி முதல் எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்காக மாற்றி அறிவித்தது. இதனால், எந்த கடைகளும், உணவகங்களும் இயங்கவில்லை. ஸ்விக்கி,சொமோட்டோ போன்ற நிறுவனங்களின் சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள இந்த முழு ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டும், நடமாடும் மளிகை மற்றும் காய்கறி வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாலையோரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களது உணவுத்தேவைகளுக்கும் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சின்னத்திரையில் எதிர்மறை கதாபாத்திரங்களான வில்லி வேடத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா. இவர், இந்த ஊரடங்கால் வாடும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.


Dharsha gupta | தனி வீடு.. இலவச உணவு.. 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லாக்டவுன் உதவி!

சாலையோரங்களில் உதவும் கரங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு நாம் உதவாவிட்டால், யார் உதவுவார்கள் என்றும். உங்களால் முடிந்ததை உதவுங்கள் என்றும் தர்ஷா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக இந்த சேவையை செய்து வரும் தர்ஷா, சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு தானே நேரில் சென்று உணவுகளை வழங்கி வருகிறார்.

இவர், இந்த ஊரடங்கு நேரத்தில் அவர் உணவுகளை வழங்குவதற்காக தினமும் வெளியே சென்று வருவதால், வீட்டில் இருப்பவர்களின் பாதுகாப்பு கருதி தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர் அங்கிருந்தே உணவுகளை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Dharsha gupta | தனி வீடு.. இலவச உணவு.. 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லாக்டவுன் உதவி!

தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் ஜீ தொலைக்காட்சியின் சில தொடர்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Sai Pallavi:
Sai Pallavi: "என்னோட Support உங்களுக்கு இருக்கும்.." நடிகர் தனுஷின் அரசியல் வருகைக்கு சாய் பல்லவி ஆதரவு
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
Sandiyar:
Sandiyar: "சண்டியர்" அவதாரம் எடுத்த கமல்ஹாசன்! 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே டைட்டில்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஏன் வைதீக முறைப்படி பேத்தி கல்யாணம் நடந்தது?" - துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.. சொன்ன காரணம் என்ன?
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Embed widget