Ashwin Troll Meme: 40 கதை கேட்டு தூங்கினேன் மீம்ஸ்.. அஷ்வினை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்...!
குக்வித் கோமாளி புகழ் அஸ்வினை கலாய்த்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் மீம்ஸை பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் அஸ்வின் பேசிய பேச்சு திரைப்பட இயக்குனர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தது. மேலும், யூ டியூப், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று அனைத்து பக்கங்களிலும் அஸ்வினை ட்ரோல் செய்து மீம்ஸ்களும், வீடியோக்களும் பதிவிட்டு வைரலாக்கப்பட்டது.
அஸ்வினைப் பேச்சை கண்டிக்கும் விதமாக பிரபல திரை விமர்சகரும், ஆண்டி இந்தியன் பட இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் மீம்ஸைப் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு மீமில், இயக்குனர் பாலா நடிகர் அஸ்வினை சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வருவது போலவும், அப்போது “ சரி வா… நா உனக்கு ஒரு கதை சொல்றேன்… நீ எப்படி தூங்குவனு தூங்கு காமி..” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
— Blue Sattai Maran (@tamiltalkies) December 9, 2021
ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட் பதிவில், ஒரு காலண்டர் படத்தில் அஸ்வின் பேசுவது போல பதிவிட்டு, ஆணழகன் அஸ்வின் ரசிகர் மன்றம் என்று அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு கீழே அஸ்வின் அழகா இருந்தா அவரு அம்மா அப்பாக்கு நன்றி சொல்லுங்க… டிசைன் பிடிச்சிருந்தா காலண்டர் ஆர்டர் பண்ணுங்க…” என்று மதுரையில் காலண்டர் கடைக்காரர் ஒருவர் தனது கடை விளம்பரத்திற்காக பயன்படுத்திய போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
— Blue Sattai Maran (@tamiltalkies) December 10, 2021
மேலும், அஸ்வினைப் பற்றிய பிரபல இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்ததை கூட, 40 கதைகள் கேட்டு தூங்கிய அஸ்வின் பற்றிய கருத்து என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.
ப்ளூசட்டை மாறன் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் அஸ்வினின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை பதிவிட்டனர். 40 கதைகளை கேட்டபோது தூங்கியதாகவும், இந்த கதையை கேட்கும்போது மட்டுமே தூங்கவில்லை என்றும் பேசியதை கண்டித்து பல யூ டியூப் சேனல்களும் ட்ரோல் வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்