வடிவேலு ஒரு பாம்பு... கரம் வைத்து 2 பேரையும் அப்படி பண்ணுனாரு! காமெடி நடிகை ஆர்த்தி சொன்ன ஷாக்கிங் தகவல்!
சினிமாவில் தன்னை விட யாரும் வளர்ந்து விடக் கூடாது என்று நினைக்கும் வடிவேலு, கோவை சரளாவையும், தன்னையும் 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' படத்திலிருந்து நீக்கிவிட்டார் என்று ஆர்த்தி கூறியுள்ளார்.

சினிமாவில் தன்னை விட யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற மனப்பான்மை ஒரு சிலரிடையே இருக்கத்தான் செய்கிறது. அதற்கு உதாரணம் என்று நடிகர் வடிவேலுவை அவருடன் இணைந்து நடித்த காமெடி நடிகர்கள் பலரும் கூறி உள்ளதை கேட்டிருக்க முடியும். அந்த வகையில் இப்போது காமெடி நடிகை ஆர்த்தியும் வடிவேலு பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது, கோவை சரளாவின் வாய்ப்பை வடிவேலுவே கெடுத்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். நடிகர் வடிவேலுவின் காமெடியை எந்தளவிற்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ அதே அளவிற்கு அவரது தனிப்பட்ட குணத்திற்காக சினிமாவில் அவரை பலரும் விமர்சிக்கிறார்கள். மேலும், வடிவேலுவிற்கு சினிமாவில் நடிக்க தடையும் விதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரெட் கார்டும் கொடுக்கப்பட்டது.

இதனால் ஒரு சில வருடங்கள் வடிவேலு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவருக்கு யாரும் வாய்ப்புகளும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் நடிகர் வடிவேலு பற்றி சமீபத்தில் ஆர்த்தி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். ஆர்த்தி ஒரு சில படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ளார். அதிலேயும் கிரி, வில்லு போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் ஒரு படத்தில் நடிக்கும் போது வடிவேலு யாரையாவது அழைத்து, நீ நன்றாக நடிக்கிறாய் என்று சொல்லிவிட்டால் அந்த காட்சி கண்டிப்பாக படத்தில் இருக்காது நீக்கப்பட்டுவிடும். எப்போதெல்லாம் வடிவேலு அப்படி சொல்கிறாரோ அப்போதெல்லாம் அந்த காட்சிகள் இருக்காது. இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, மோனிகா, தேஜா ஸ்ரீ, மனோரமா, நாகேஷ், நாசர், ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் தான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்தப் படத்தில் என்னையும், கோவை சரளாவையும் முக்கிய ரோலில் நடிக்க வைக்க இயக்குநர் ஒப்பந்தம் செய்தார்.

ஆனால், நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் நடிக்க கூடாது என்று எங்களை இந்தப் படத்திலிருந்து நீக்கிவிட்டார் வடிவேலு. செந்தில் மற்றும் கோவை சரளா காம்பினேஷனுக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் ரசித்தது வடிவேலு மற்றும் கோவை சரளா காம்பினேஷன் தான். அப்படியிருக்கும் போது தனது படத்தில் கோவை சரளாவையே நடிக்க கூடாது என்று சொன்னார். அவர் ஒரு பாம்பு மாதிரி என்றும்... மனதில் கரம் வைத்து பழிவாங்க கூடியவர் என ஆர்த்தி இந்த பேட்டியில் ஓப்பனாக பேசி இருந்தார்.





















