நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்லுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட தலைவர்களுக்கு கொரொனா தொற்று உறுதியானது. பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ளா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





















