மேலும் அறிய

Ajithkumar: ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்துமீறிய ரசிகர்கள்; கோபப்பட்ட அஜித்! பாவா லட்சுமணன் பகிர்ந்த பகீர் தகவல்!

அஜித் ரொம்ப நல்ல மனிதர். கடைசியாக நான் அவருடன் திருடா படத்தில் பணியாற்றினேன். அது ஜனா என்ற பெயரில் ரிலீசானது.

நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் தன்னை அடிக்க வந்த சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

கடந்த 2004 ஆம் ஆண்டு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அஜித்குமார், சினேகா, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “ஜனா”. இந்த படத்தை ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் தினா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக காமெடி நடிகர் பாவா லட்சுமணன் பணியாற்றியிருந்தார். அப்போது மறக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது. 

ஒரு நேர்காணலில் பேசிய பாவா லட்சுமணண் அஜித்தைப் பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், “அஜித் ரொம்ப நல்ல மனிதர். கடைசியாக நான் அவருடன் திருடா படத்தில் பணியாற்றினேன். அது ஜனா என்ற பெயரில் ரிலீசானது. அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு பைக்கில் தான் வந்தார். பார்டர் தோட்டத்தில் ஷூட்டிங் நடந்த நிலையில் ஒரு 100 ரசிகர்கள் மொட்டை அடித்து விட்டு அஜித்தை பார்க்க வந்தார்கள். நான் கேரவனில் இருந்த அவரிடம் சென்று விஷயத்தை சொன்னேன். மொட்டை தலையுடன் இருந்த அனைவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்து என்னவென்று விசாரித்தார். அதற்கு ரசிகர்கள் நீங்கள் மொட்டை போட்டதால் நாங்களும் போட்டுக் கொண்டோம் என தெரிவித்தார்கள். எல்லாருடனும் சலிக்காமல் தோளில் கைபோட்டுக் கொண்டு போட்டோ எடுத்தார். நான் ஒவ்வொரு ரசிகனாக போட்டோ எடுக்க அனுப்பி கொண்டு, எடுத்து முடித்தவுடன் அவர்களை விலக்கி விடும் பணியை மேற்கொண்டிருந்தேன். 

மதிய உணவு இடைவேளையின்போது நான் மேலே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு 10 பேர் என்னை சூழ்ந்து கொண்டார்கள். என்னை கெட்ட வார்த்தையில் பேசி இவர் யாருன்னு தெரியுதா? ஆனந்தம் படத்தில் நடிச்சிருப்பான்ல அவன் தான் என சொன்னார்கள். அடிக்க கை ஓங்கியதும் நான் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை போட்டு விட்டு கேரவனில் அஜித்தை பார்க்க ஓடினேன். அஜித்திடம் ரசிகர்கள் அடிக்க வந்த விஷயத்தைச் சொன்னேன். 

உடனே ரசிகர்களிடம் சென்று நீங்கள் பார்க்க வேண்டும் என சொன்னீர்கள். நானும் பார்த்து போட்டோ எடுத்துக் கொண்டேன். லட்சுமணன் அவர் டூட்டியை செய்றாரு. ஏன் அடிக்க போறீங்க? எல்லாரும் போங்கன்னு சொன்னதும் ரசிகர்கள் போய் விட்டார்கள். அஜித் சொன்னதும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது” எனத் தெரிவித்தார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பறக்கும் கார்! ரன்பீர் கபூர் பேச்சால் சர்ச்சை
5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பறக்கும் கார்! ரன்பீர் கபூர் பேச்சால் சர்ச்சை
Karthigai Deepam: இதயத்தைத் திருடிய ரவுடிகள்... ஆபரேஷன் தியேட்டரில் சாமுண்டீஸ்வரி! காப்பாற்றுவாரா கார்த்திக்?
Karthigai Deepam: இதயத்தைத் திருடிய ரவுடிகள்... ஆபரேஷன் தியேட்டரில் சாமுண்டீஸ்வரி! காப்பாற்றுவாரா கார்த்திக்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
Embed widget