Nayan Vignesh Wedding: பவுன்சர்கள் படை சூழ நயன்-சிவன் திருமணம்! இசிஆர்- யில் திருமணத்தை பார்ப்பது அவ்வளவு ஈஸியல்ல!
அறிமுகப் படம் தொடங்கி நயன்தாராவின் நலம் விரும்பியாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் திருமணத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டின் காதல் பறவைகளாக வலம் வரும் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இன்று (ஜூன்.09) மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெறும் நிலையில் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதலமைச்சர் வருகை?
முன்னதாக நயனும் விக்னேஷ் சிவனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வைத்து வரவேற்ற நிலையில், முதலமைச்சர் திருமணத்துக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, பொன்வண்ணன், அனிருத் தந்தை ரவிச்சந்தர், நடிகை லிசி, சரண்யா பொன்வண்ணன், நடன இயக்குநர் கலா ஆகியோர் வருகை தந்துள்ளனர். மேலும் பல நட்சத்திரங்கள் திருமணத்துக்கு வருகை தருகின்றனர்.
ரஜினி, ஷாருக், அஜித் வருகை
அறிமுகப் படம் தொடங்கி நயன்தாராவின் நலம் விரும்பியாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் திருமணத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜவான் படத்தின் மூலம் நயனுடன் ஜோடி சேர்ந்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இத்திருமணத்துக்கு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் நயனுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த நடிகர் அஜித் தனி விமானம் மூலம் இவர்களது திருமணத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ஷூட்டிங்கால் வர முடியாத சமந்தா
இத்திருமணத்தில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மூலம் நயன் - விக்னேஷ் சிவன் ஜோடியின் நெருங்கிய தோழியாக மாறியுள்ள சமந்தா, இத்திருமணத்தில் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், குஷி பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளதால் அவர் திருமணத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என முன்னதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன
பிரபலங்களும், முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்ள இருப்பதால், திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது
அதன்படி, அழைப்பிதழ் இருந்தால் மட்டும் இந்த திருமணத்தில் நுழைய முடியாது என கூறப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் ஒரு கோட் அனுப்பி வைக்கப்படும். அந்த கோடை காண்பித்தால் தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு நுழைய முடியுமாம்.
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் சுமார் ஆறு ஆண்டு காலத்துக்குப் பிறகு இன்று திருமணம் நடக்கிறது