Chocolate movie: ‛ அனைவரும் டவலோடு ஆட்டோம் போட்ட நாள் இன்று’ 21ம் ஆண்டில் சாக்லெட்!
Chocklet movie released today : சாக்லெட் திரைப்படம் 2001ம் செப்டம்பர் மாதம் 7 தேதி வெளியானது. இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
Chocklet movie released date: இளைஞர்களின் தேசிய கீதம் சாக்லேட் படத்தின் " மல மல..." பாடல் வெளியான நாள் இன்று
ஆர். மாதேஷ் இயக்கத்தில் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் 2001ம் செப்டம்பர் மாதம் இந்த நாளில் வெளியானது "சாக்லெட்" திரைப்படம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. 'சாக்லேட்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
View this post on Instagram
90 'ஸ் கிட்ஸ்களின் மாஸ் ஹீரோ:
90 'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் அறிமுகமான நாள் முதல் பல முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் என பல சினிமா ஜாம்பவான்களின் படத்தில் நடித்தவர். மாஸ் ஹீரோ என்ற பட்டத்தை அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு முன்னரே கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் பிரசாந்த் " சாக்லெட்" திரைப்படத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். அவரின் நடிப்பிற்கு பல நேர்மறையான விமர்சனங்களை ரசிகர்கள் பகிர்ந்தனர். தயாரிப்பாளர், நடிகர் தியாகராஜனின் மகன் என்ற பின்னணியில் இருந்து வந்து இருந்தாலும் தனெக்கெனெ ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகர் பிரசாந்த். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர்.
இளைஞர்களின் தேசிய கீதம்:
சாக்லெட் படத்தின் கதாநாயகியாக முதலில் நடித்தது ரீமா சென் மற்றும் ரிச்சா பலோட். ஆனால் சில காரணங்களால் அவர்கள் படத்தில் இருந்து விலகி கொள்ள படத்திற்கு புதிய முகமான மிஸ். கோவா பட்டத்தை வென்ற ஜெயா ரே இந்த திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் மும்தாஜ் நடித்திருந்தார். இப்படத்தில் தேவா இசையமைப்பில் மும்தாஜ் நடிப்பில் வெளியான பாடலான "மல மல..." பாடல் இளைஞர்கள் மத்தியில் கொஞ்ச காலத்திற்கு தேசிய கீதமாகவே இருந்தது எனும் அளவிற்கு உலகளவில் பிரமபலமடைந்தது. இந்த பாடலில் டவல் வைத்து மும்தாஜ் போடும் அந்த டான்ஸ் ஸ்டேப் மிகவும் அனைவரையும் ஆடவைத்தது.
மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் :
மேலும் இப்படத்தில் லிவிங்ஸ்டன், சுஹாசினி, நாகேந்திர பிரசாத், சார்லி, தாமு, வெண்ணிற உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுஹாசினி இதுவரையில் நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவாவின் இசையில் கவிஞர் வாலியின் வரிகளில் பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன.
#Prashanth #Thiagarajan
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) July 12, 2022
With world’s best #LydyanNadhaswaram and his sister Amsavarthini@actorprashanth pic.twitter.com/MkEBYBas96