Watch Video : ட்ரெண்டிங்காகும் 'சித்தா' படத்தின் "என் பார்வை உன்னோடு..." பாடல்... AI செய்த மேஜிக்! வைரலாகும் வீடியோ
Chithha : AI மூலம் உருவாக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான சித்தா படத்தின் "என் பார்வை உன்னோடு…உன் பொம்மை கண்ணோடு" பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூகத்தில் நடைபெறும் அவலங்களை திரைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது சமீப காலமாக சினிமாவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெருகி வரும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் 'சித்தா'.
சு. அருண் குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சித்தா' திரைப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் பாடலாசிரியர் விவேக் வரிகளில் சந்தோஷ் நாராயணன் மற்றும் த்வானி கைலாஸ் குரலில் ஒலித்த "என் பார்வை உன்னோடு…
உன் பொம்மை கண்ணோடு" என்ற பாடல் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
சோசியல் மீடியா எங்கும் 'சித்தா' படத்தின் இந்த பாடல் மிகவும் வைரலாகி வருகிறது. பலரும் இந்த பாடலை அவரவர்களின் குரலில் பாடி ரீல்ஸ் செய்து ட்ரெண்டிங்காக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சாரா பிளாக் என்ற பாடகி ஒருவர் இந்த பாடலை பாடி தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்தது உலகளவில் வைரலாகி கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
பலரும் "என் பார்வை உன்னோடு… உன் பொம்மை கண்ணோடு" பாடலை பாடி ட்ரெண்டிங் ஆக்கி வரும் வேளையில் சோசியல் மீடியாவில் AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாடலின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ், எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் விஜய் மாறி மாறி பாடுவது போல ஒரு 30 நொடி வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) மிகவும் ஆபத்தானது தான். அதன் மூலம் பல தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நடைபெறுகின்றன. ஆனால் முதல் முறையாக ஒரு அசத்தலான வீடியோவை AI மூலம் உருவாகியுள்ளது அற்புதமாக வந்துள்ளது.
AI Is Dangerous.. But This One is Just 💙🥹🙏🎶
— தோழர் ஆதி (@RjAadhi2point0) December 11, 2023
30 seconds Of Bliss 🤌😍 pic.twitter.com/uQld5rHtRp
ஏ.ஆர்.ஆர் குரலில் இருக்கும் அந்த மேஜிக், தனுஷ் குரலில் காந்தம், விஜய்யின் மாஸ் என அவர்களின் குரலில் அந்த பாடலை வேறு ஒரு லெவலுக்கு எடுத்து சென்றாலும் எஸ்.பி.பியின் குரலில் ஒலித்த "என் பார்வை உன்னோடு… " பாடல் நம்மை வேறு ஒரு உலகத்திற்கே அழைத்து சென்றது. லவ் யூ எஸ்.பி.பி சார்...