மேலும் அறிய

Chinmayi Sripaada:”அப்யூசிவ் ஆளு இருக்கும் இடத்துக்கு எனக்கு போகணும்ன்ற அவசியமில்ல” ராதாரவியை விளாசிய சின்மயி

Chinmayi Sripaada: டாபிங் சங்க கட்டிட வளாகத்திற்குள் பாடகி சின்மயியை அனுமதிக்கமாட்டோம் என ராதாரவி கூறியதற்கு சின்மயி பதில் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கம்ப்ளீட் ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'லியோ'. தமிழ், தெலுங்கும் கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். 

 லியோ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அவருக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும்  கன்னடத்திலும் சின்மயி தான் திரிஷாவுக்கு டப்பிங் பேசியுள்ளார். இதற்காக லோகேஷ் கனகராஜ் மட்டும் லலித் குமாருக்கு தன்னுடைய எக்ஸ் பக்கம் மூலம் நன்றி தெரிவித்து அவர்களின் தைரியத்தையும் பாராட்டினார். பாடகி சின்மயி பல ஆண்டுகளுக்கு பிறகு டப்பிங் பேசியுள்ளது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது உண்மை என்றாலும் லோகேஷ் கனகராஜுக்கும் தொல்லை ஏற்ப்பட்டது. 

அதாவது டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சின்மயி டப்பிங் செய்தது டப்பிங் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுங்க பார்த்துக்கொள்ளலாம் என சின்மயிடம் கூறியதாகவும் அதனால்தான் சின்மயி டப்பிங் பேசியதாகவும், லோகேஷ் கனகராஜின் தைரியத்திற்கு பாராட்டும் தெரிவித்திருந்தார். இதனால் இது தொடர்பாக சின்மயி, லோகேஷ் கனகராஜ் மற்றும் டப்பிங் சங்கத்தினருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. 

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில், டப்பிங் சங்கத் தலைவர் ராதாரவி, லோகேஷ் கனகராஜ்க்கு எதுவும் தெரியாது பாவம். சின்மயி சங்கத்தில் உறுப்பினரா அல்லது உறுப்பினர் இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியாது.  இது தொடர்பாக அவரிடம் பேசியதும் அபராதத்தை தான் செலுத்துவதாகக் கூறினார், அதேபோல் அபராத்தையும் கட்டியுள்ளார். சின்மயியை இனிமேல் டப்பிங் சங்க கட்டிடத்திற்குள் சேர்க்கவே மட்டோம் எனக் கூறினார். 

ராதாரவியின் இந்த பேச்சுக்கு பாடகி சின்மயி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் சராமாரியான பதில் அளித்துள்ளார். அதில், “மலேஷிய நாடு வழங்காத போலி டத்தோ பட்டத்த தானே சூட்டிகிட்டு, டத்தோ வளாகம்னு பேரு வெச்ச அந்த டப்பிங் யூனியன் காம்பவுடு, பில்டிங் எல்லாமே இல்லீகல்னு சென்னை கார்ப்பரேஷன் சீல் வெச்சு தரமட்டம் ஆக்கிடுச்சே. டப்பிங் யூனியன் மெம்பர்ஸோட ஒழைப்புலெருந்து இவங்க எடுத்த காசு மண்ணோட போச்சு. இவரைபோல ஒரு அப்யூசிவ் ஆளு இருக்கும் எந்த காம்பவுண்ட்லயும் எனக்கு போகணும்ன்ற அவசியமில்ல” என மிகவும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன்னர் சின்மயி மற்றும் வைரமுத்து விவகாரத்தின்போது சின்மயி, தனக்கும் வைரமுத்து இடையிலான மோதல் காரணமாக வைரமுத்துவுக்கு ஆதரவாக டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி செயல்படுவதாக பகிரங்கமாக குற்றசாட்டுகளை தெரிவித்தார். மேலும் தான் சினிமாவில் டப்பிங் பேச முடியதவாறு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கி விட்டார் என்று சின்மயி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பாக ராதாரவியிடம் கேள்வி கேட்டபோது, “தனிப்பட்ட முறையில் எனக்கென்ன சின்மயி அத்தை பொண்ணா.? அதெல்லாம் ஒரு கருமமும் கிடையாது, என்னிடம் வந்து அவருடைய அம்மா டப்பிங் யூனியனில் மெம்பராக சேர்க்கச் சொன்னார். நான் கையெழுத்து போட்டு சேர்த்தேன், அவ்வளவுதான். அத்துடன் முடிந்து விட்டது, மெம்பராக இல்லாதவர்கள் யாருக்காவது வாய்ஸ் கொடுத்தால் அதை நாங்கள் கேள்வி கேட்போம்” என தெரிவித்திருந்தார். 

ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள பிரச்னை காரணமாக இருவரும் மீண்டும் இந்த விவகாரத்தில் மிகவும் காட்டமாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்கின்றனர் எனவும் கூறபடுகின்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget