தயாரிப்பாளர் மகன்னா நடிக்க வருவியா..? நாசர் சார் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை... மனம் திறந்த ஜீவா!
சென்னையில் லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், அந்த நிகழ்ச்சியில் குணசித்திர நடிகர் நாசர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவாயா..? என்று நாசர் சார் கேட்ட கேள்விக்கு என்னிடம் இன்னும் பதில் இல்லை என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
சென்னையில் லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், அந்த நிகழ்ச்சியில் குணசித்திர நடிகர் நாசர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய நடிகர் ஜீவா, "சென்னை லயோலா கல்லூரிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளேன். என் முதல் படம் வெளியானபோது வந்தேன். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணம்தான்.
அதேபோல், இங்கு கூட்டம் அதிகளவில் உள்ளது. தற்போது உள்ள நிலைமையில் திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் கூடுவதில்லை. மேடையில் இருக்கும் அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் முதல் படத்தில் நடிக்கும்போது எனக்கு நாசர் சார்தான் மாமனாராக இருந்தார். தற்போது அவருடன் ஒரே மேடையில் இருப்பது நான் என்ன பேச வந்ததேன் என்பதையே மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். நாசர் சார்தான் என் வழிகாட்டி. அந்த படப்பிடிப்பில் நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாக அறிமுகமானேன். அப்பொழுது அவர், "தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா? என்றும், நான் ஏன் நடிக்க வந்தேன்” என்றும் கேள்வி எழுப்பினார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் எந்த துறைக்கு வேலைக்கு சென்றாலும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி அல்லது குரு இருப்பார்கள். அந்த வகையில் எனக்கு நிறைய குரு கிடைத்தார்கள். அதில், என் முதல் குரு நாசர் சார்தான் என்று கூறி மேடையிலேயே நாசருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், லயோலா கல்லூரி விஜய், சூர்யா போன்றோரை வளர்த்து தமிழ் சினிமா துறைக்கு தந்துள்ளது. அவர்கள் படித்த இந்த கல்லூரியில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது எனக்குதான் பெருமை என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்