மேலும் அறிய

Arya: ‛நம்பாதீங்க... நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கிறேன்...’ விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சி இது’’ -ஆர்யா

ஜெர்மனை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை ஏமாற்றிய அவரிடமிருந்து 70 லட்சம் ரூபாயை ஆர்யா அபகரித்ததாக சம்மந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆர்யா தரப்பு தந்த அழுத்தத்தின் பேரில் இந்த விசாரணை முடங்கியிருப்பதாக சம்மந்தப்பட்ட பெண்,வெளிநாட்டில் இருந்த படி தனது வழக்கறிஞர் மூலம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வாளர் கீதா தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி நேற்று இரவு சம்மந்தப்பட்ட கீதா முன்னிலையில் நடிகர் ஆர்யா ஆஜரானார். அப்போது வித்ஜா அளித்த புகார் குறித்து ஆய்வாளர் கீதா, ஆர்யாவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது ஆர்யா பேசியதாக கூறப்படும் தகவல்கள் இதோ:

‛‛நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. தயவு செய்து என்னை நம்புங்கள். என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சி இது. உங்கள் விசாரணைக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். மற்றபடி என் மீதான புகாரில் எந்த உண்மையும் இல்லை,’’ என ஆர்யா தனது தரப்பு வாதத்தை கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண் சமர்பித்துள்ள ஆவணங்கள் தொடர்பாக அவர் எந்த கருத்தும் கூறவில்லை எனக்கூறப்படுகிறது. இணையவழியாக தான் அவர்களின் நட்பு மற்றும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படும் நிலையில், சைபர் க்ரைம் போலீசார் உதவியோடு அவற்றை ஆராயவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 


Arya: ‛நம்பாதீங்க... நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கிறேன்...’ விசாரணையில் புலம்பிய நடிகர் ஆர்யா!

வழக்கு தொடர்பான முழு விபரம் இதோ

ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல்துறைக்கு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ஆர்யா, வெஸ்டர்ன்யூனியன் மூலமாக ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்துகொள்ளாமல் சாயிஷாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்கிறார் என தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள், வாட்ஸ் அப் சாட் உள்ளிட்ட விவரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த புகார் பின்னர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்தவாறே வழக்கறிஞர் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார் வித்ஜா. அதில், என்னிடம் வாங்கிய பணத்தைத் தான் சார்பட்டா, அரண்மனை 3, மலையாளத் திரைப்படம் ரெண்டகம் உள்ளிட்ட படங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். அதனால் சிபிசிஐடி வழக்கை முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜா புகார் தொடர்பான விசாரணை விவரங்களை ஆகஸ்ட் 17-இல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே ஆர்யா தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த புகாரை சிபிசிஐடி கிடப்பில் போட்டு இருக்கலாம் என வித்ஜாவின் வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். 

பிரபல தமிழ் நடிகர் ஆர்யா மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஆர்யா நேற்று இரவு நேரில் ஆஜரானார். 

ஆஜரான அவரை காவல் ஆய்வாளர் கீதா விசாரணை செய்துள்ளார். ஆனால், இந்த புகார் குறித்து ஆர்யா தரப்பில் இருந்து விளக்கம் தரப்படவில்லை.

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget