மேலும் அறிய

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!

TN 10th Supplementary Result 2026: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மதிப்பெண்களை அறிவது எப்படி? தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்வது எப்படி?

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மதிப்பெண்களை அறிவது எப்படி? தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்வது எப்படி? மற்றும் விடைத்தாள் ஒளிநகலுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று அறியலாம். 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்:

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெற்றன. இத்தேர்வினை மொத்தம் 66,488 தேர்வர்கள் எழுதினர். தற்போது இத்தேர்வு முடிவினை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக இன்று 05.08.2026 (புதன்கிழமை) முதல் பெறலாம்.

எப்படி?

தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று RESULT என்ற வாசகத்தை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் SSLC SUPPLEMENTARY EXAM JULY-2026 PROVISIONAL MARK SHEET DOWNLOAD Click செய்து தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தான் ஒளிநகலுக்கு விண்ணப்பம் செய்தல்

ஜூலை 2020 பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கான விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் NOTIFICATION பகுதிக்குச் செல்லவும்.

அதில், SSLC Examination என்ற வாசகத்தை க்ளிக் செய்து, தோன்றும் பக்கத்தில் SSLC JULY-2026 SCAN COPY APPLICATION வாசகத்தினை Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதியிறக்கம் செய்து கொள்ள வோண்டும்.

தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து. 10.08.2026 (திங்கட்கிழமை) மற்றும் 11.08.2026 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வோண்டும். தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தானின் ஒளிநகல் (Scan Copy of the Answer Script) பெறுவதற்கான கட்டணம் ரூ.275/-ஐ தேர்வர்கள் விண்ணப்பிக்கவுள்ள அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல்/ மறுதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாளின் ஒளிநகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.

உதவி எண்கள் வெளியீடு

தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தேர்வர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள்: 14417 /104/ 14416

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget