Rajinikanth Birthday: ”ஹாப்பி பர்த்டே தலைவா ! ” - ஸ்டார்ஸ் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்! குவியும் வாழ்த்துகள்!
”என்னோட உண்மையா இன்ஸ்பிரேஷன் நீங்கதான் சார்...எப்போதும் உங்க கூட பேசுவதற்கு 2 நொடிகள் கிடைத்தாலும் அது எனக்கு மிகவும் சிறப்பானது."
தமிழ் சினிமாவின் முக்கிய மற்றும் முன்னணி நகரும், சூப்பர் ஸ்டார் என அறியப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் என அனைவரும் வாத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஒரு நடிகருக்கு நடிகர்களே ரசிகர்களாக இருப்பது ரஜினி , கமல் போன்ற இரு பெரும் சினிமா சகாப்தங்களுக்குதான் பொருந்தும் . அதிலும் ரஜினிக்கு சொல்லவே தேவையில்லை... இன்று அவரது பிறந்த நாளில் பல சினிமா பிரபலங்கள் உருக்கத்துடனும் பெருமையுடனும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது படைப்பாற்றல் மற்றும் அற்புதமான நடிப்பால் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்
A very happy birthday to @rajinikanth Ji. May he keep inspiring people with his creativity and phenomenal acting. May Almighty bless him with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 12, 2021
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி , தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தளபதி’ திரைப்படத்தின் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு ரஜினி” என தமிழில் குறிப்பிட்டுள்ளார்.
Wishing you a very happy birthday dear @rajinikanth. Stay healthy and blessed as always.
— Mammootty (@mammukka) December 12, 2021
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு ரஜினி#HBDSuperstarRajinikanth pic.twitter.com/ramDKn5ob3
அதே போல நடிகர் சிவகார்த்திகேயன் ”என்னோட உண்மையா இன்ஸ்பிரேஷன் நீங்கதான் சார்...எப்போதும் உங்க கூட பேசுவதற்கு 2 நொடிகள் கிடைத்தாலும் அது எனக்கு மிகவும் சிறப்பானது. அது எனக்கு கடினமா உழைப்பதற்கான கூடுதல் சக்தியை கொடுக்கும் “ என குறிப்பிட்டுள்ளார்.
Happy birthday to my inspiration super star @rajinikanth sir 🙏👍 Always got very few seconds to interact with you but every second was special and it gave me the extra energy to work harder👍😊Love you sir 🙏❤️#HBDSuperstarRajinikanth pic.twitter.com/H5OIbueN5l
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 12, 2021
இசையமைப்பாளர் டி.இமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “அய்யா! அவரது பிறந்தநாளில் “அண்ணாத்தே”வின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை வழங்குவதில் அளவற்ற மகிழ்ச்சி!” என குறிப்பிட்டுள்ளார்.
Wishing only Happiness and peace to our Superstar @rajinikanth ayya! Immense joy to present the Original Sound track of “Annaatthe” on his birthday! #HBDSuperstarRajinikanth @directorsiva @sunpictures https://t.co/hpblj2VcJy
— D.IMMAN (@immancomposer) December 12, 2021
இசையமைப்பாளர் அனிருத் , ரஜினிகாந்த் தன்னை சிறு வயதில் தூக்கி வைத்துக்கொண்டு போஸ்கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy birthday Thalaiva..
— Anirudh Ravichander (@anirudhofficial) December 12, 2021
We love you before, now and forever ❤️❤️❤️ pic.twitter.com/kGaUcx8dlg
நடிகர் ஷாந்தனு , இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் , தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு மற்றும் பிற தயாரிப்பு நிறுவனங்கள் , இயக்குநர்கள் , நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy bday to our dearest #SuperStar @rajinikanth sir 😊
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 12, 2021
God bless you with happiness success and health in abundance Thalaiva 😊#HBDSuperstarRajinikanth
Happy to release the birthday special motion poster video of our Super Star @rajinikanth https://t.co/IpMunzXcgQ #HBDSuperstarRajinikanth pic.twitter.com/REzLcLHzLW
— Kalaippuli S Thanu (@theVcreations) December 11, 2021