Arya on Captain Movie: ''12 அடி உயரம்.. 20 அடி ஆழம்.. இதுதான் படத்துல பெரிய ரிஸ்க்'' ஆர்யா பேட்டி..!
கேப்டன் படத்திற்காக 12 அடி உயரத்திலும், 20 அடி ஆழத்தில் நீருக்கடியிலும் ஆர்யா சண்டைக்காட்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
கேப்டன் படத்திற்காக 12 அடி உயரத்திலும், 20 அடி ஆழத்தில் நீருக்கடியிலும் ஆர்யா சண்டைக்காட்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை ‘ டெடி’ ஆகிய இருப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ கேப்டன்’. இந்தப்படத்தின் மூலம் ‘டெடி’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனுடன் ஆர்யா இணைந்திருக்கிறார். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். முன்னதாக இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்தப்படம் குறித்து ஆர்யா பேசியிருக்கிறார்.
View this post on Instagram
இது குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது
இப்படம் மிக புதுமையானதாக இருக்கும். எனது கதாபாத்திரத்திற்கும் 120 அடி வேற்றுகிரக உயிரினத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட ஆக்ஷன் காட்சி இருக்கிறது. அந்தக் காட்சியை படமாக்குவது பயங்கரமான சவாலாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
க்ளைமாக்ஸ் காட்சியை மூணாறில் எடுக்க முடிவு செய்திருப்பதாக சக்தி என்னிடம் சொன்னபோது குளிர்காலம் உச்சத்தில் இருக்கும் டிசம்பர் மாதம் என்பதால் என்னால் அதை முழுமையாக செய்ய முடியுமா என்று கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. மழை காலத்தில் அதிரடியான காட்சியை படமாக்குவது மிகவும் சவாலானதாக மாறியது.
அந்த காட்சியில் நான் கிரேன் மூலம் 20 அடி உயரத்திற்கு தூக்கிச் செல்லப்பட்டேன். அந்த உயரத்தில், அடுத்த 3 நாட்களுக்கு, அந்த காட்சியை எடுக்கும் வேலை பயங்கரமானதாக இருந்தது. ஒருவழியாக எல்லாம் முடிந்துவிட்டதாக நான் நினைத்தபோது, ஜனவரி முதல் வாரத்தில் மும்பையில் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் இன்னொரு காட்சியை படமாக்க வேண்டும் என்று சக்தி மீண்டும் என்னிடம் கூறினார்.
அப்போது மிகவும் குளிர்காலம். குளிரில் படப்பிடிப்பு முற்றிலும் கடினமாக இருந்தது. படம் முழுக்கவே அனைவரும் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளனர். ட்ரெய்லர் எல்லோரையும் கவர்ந்திருப்பதும் பல பக்கங்களிலிருந்து வரும் பாராட்டுக்களும் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஆக்சன் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு மெய் சிலிர்க்கும் அனுபவம் கிடைக்கும்.
Think Studios உடன் நடிகர் ஆர்யாவின் The Show People இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.