சி.ஸ்.அமுதன் மற்றும் விஜய் ஆன்டனி இணையும் புதிய படம் .
சி.ஸ் அமுதன் இயக்கத்தில் க்ரைம் திரில்லர் திரைப்படம் ஒன்றில் விஜய் ஆன்டனி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலரையும் கலாய்த்த தமிழ் படம் எடுத்த சி.ஸ் அமுதன் தனது அடுத்த படைப்பை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி வைத்து இயக்குகிறார் . அவர் படத்தை பற்றி பேசுகையில் " நானும் விஜய் ஆன்டனியும் கல்லூரி கால நண்பர்கள். நான் இயற்பியல் படித்தேன், விஜய் விஸ்காம் படித்தார் . 9 வருடங்களுக்கு முன்பு "நாக்கு முக்கா " என்னும் கதையை எழுதினோம், அது சரியாக போகவில்லை .

So my next film is with my college-buddy @vijayantony & will be produced by @FvInfiniti . Pre-production is underway & the rest of a huge cast is being finalised. The film is a crime/action-thriller & as befits a Vijay Antony film a decent & positive title will soon be announced https://t.co/uisj8x2rwa
— CS Amudhan (@csamudhan) April 15, 2021

அதன் பின்பு இந்த கதை கண்டிப்பாக விஜய் ஆன்டனிக்கு மட்டும் தான் பொருந்தும் என்று தொலைபேசியில் கேட்டேன். எந்த வித கேள்வியும் கேட்காமல் படத்திற்கு ஒப்புக்கொண்டார் . அண்மையில் தான் ஸ்கிரிப்ட்டை படித்தார் " என்று கூறிய அமுதன், தனது டுவிட்டர் பக்கத்தில் படம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார். படத்தின் நடிகர்கள் தேர்வு முடிந்துவிட்டதாகவும், படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று தனது பதிவில் அமுதன் குறிப்பிட்டுள்ளார்.