Aamir Khan Dance: மகளுக்கு நிச்சயதார்த்தம்.. கொண்டாத்தில் ஆட்டம் போட்ட அமீர்கான்.. வைரலாகும் வீடியோ!
Aamir Khan Dance:பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது மகள் இரா கானின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குதூகலமாக ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
![Aamir Khan Dance: மகளுக்கு நிச்சயதார்த்தம்.. கொண்டாத்தில் ஆட்டம் போட்ட அமீர்கான்.. வைரலாகும் வீடியோ! Bollywood Star Aamir Khan Dancing Joyfully on his daughter's engagement-Watch video Aamir Khan Dance: மகளுக்கு நிச்சயதார்த்தம்.. கொண்டாத்தில் ஆட்டம் போட்ட அமீர்கான்.. வைரலாகும் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/19/0b97a9002e41e286d935707b554e31741668841418905501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் பட தயராப்பாளர் ரீனா டுட்டாவின் மகள் இராகானிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், நடிகர் அமிர்கான் மகிழ்ச்சியுடன் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பாலிவுட் ஜாம்பவான் ஆமீர் கான்:
கடந்த 30 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக கோலோச்சி வருபவர் அமீர்கான். பத்மஸ்ரீ, பத்மபூஷன், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துருக்கும் இவருக்கு, பாலிவுட் மட்டுமன்றி, இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். தாரே சமீன் பர், லகான், பிகே, தங்கல், 3 இடியட்ஸ் என பல முத்திரை பதிக்கும் படங்களை கொடுத்த பெருமையும் அமீர்கானுக்கு உண்டு. நடிப்பது மட்டுமன்றி, சமூகத்தில் நிகழும் அநீதிகளை தட்டிக் கேட்பது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பிரபலங்களுள் ஒருவர் அமீர்கான். மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறும், சத்யமேவ ஜெயதே எனும் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் சில வருடங்களுக்கு முன்னர் அமீர்கான் நடத்தி வந்தார்.
அமீர்கான், 1986 ஆம் ஆண்டில், ரீனா டுட்டா என்பவரை மணந்து கொண்டார். 16 வருட இல்வாழ்க்கைக்கு பிறகு, இவர்கள் இருவரும் 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு, ஜூனைத் கான் மற்றும் இரான் கான் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரான் கானிற்கு, தனது நீண்ட நாள் காதலர் நுபுர் ஷிகாரேவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
ஆமிர் கானின் குதூகல ஆட்டம்!
![Ira Khan with Nupur Shikhare-Aamir Khan](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/19/d7c89ec24460e3770c61ca4f578cc42b1668841154989501_original.jpg)
இரான் கான்-நுபுர் ஷிகாரேவின் திருமண நிச்சயதார்த்த கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், நடிகர் அமீர்கான் வெள்ளைக் குர்த்தா-வெள்ளை தாடி என மாஸாக தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வலைதளங்களில் கலக்கி வருகின்றன. அது மட்டுமன்றி, தனது மகள் திருமணம் செய்யவுள்ள குஷியில், நடிகர் அமீர்கான் நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மிஸ்டர் இந்தியா படத்தில், உதித் நாராயணன் பாடிய, “பாப்பா கடே ஹேன்” எனும் பாடலுக்கு நடனமாடியுள்ளார் அமீர்கான். மிஸ்டர் இந்தியா படத்தில் அமீர்கான் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடனமாடும் வீடியோக்களுக்கு லைக்ஸ் மழையாக குவித்து வரும், சமூக வலைதள வாசிகள், “வயசானாலும் செம க்யூட் பா நீ” என்று ஆமீர் கானைப் பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)