(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: ‛நவீன ரக டிராக்டர்: அனைவருக்கும் இலவச சவாரி’ - சோனு சூட் பகிர்ந்த வீடியோ
பாலிவுட் நடிகர் சோனு சூட் ஒரு மேம்பட்ட டிராக்டரை வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். பேருந்து வசதி தேவைப்படுவோருக்கு பேருந்துகள், விமான டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல ஏராளமான உதவிகளை சோனு சூட் செய்தார். கொரோனாவில் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவும்சோனு சூட் ஏற்பாடு செய்தார். இதனால் சோனு சூட் மிகப்பிரபலமனவராக மாறினார்.திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும், நடிகர் சோனு சூட் ரியல் ஹீரோகவாக செயல்பட்டார்.
இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மும்பை இல்லத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோனு சூட் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறி ஒரு கிரவுட் ஃபண்டிங் தளத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.2.1 கோடியை திரட்டியதாக வருமான வரித்துறை தெரிவித்தது. மேலும் ரூ. 20 வரி ஏய்ப்பு செய்துள்ளார் சோனு சூட் என்றும் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து சோனு சூட் செயல்பட போவதாக அறிவித்த பிறகே இந்த சோதனை என புகார் எழுந்தது.
View this post on Instagram
அதுமட்டுமில்லாமல் சோனுசூட் மும்பையில் நடத்தி வரும் விடுதிக்கும் பிரச்னை எழுந்துள்ளது. அந்த அடுக்குமாடி அனுமதியின்றி கட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கில் அந்த கட்டடம் அனுமதியின்றி கட்டப்படவில்லை. குடியிருப்பாக இருந்தது. மீண்டும் குடியிருப்பாக மாற்றத் தயார் என சோனு சூட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சோனுசூட், மத்திய அரசால் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அப்போது ‛விவசாயி என் கடவுள்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சோனு சூட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் ஒரு அட்வான்ஸ்டு ட்ராக்டர் வைத்திருக்கிறேன். தானாக இயங்கும் தொழில்நுட்பம். பஞ்சாப்பில் அனைவருக்கும் இலவச சவாரி” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.