மேலும் அறிய
‛தாமரையிடம் பிக்பாஸ் போகாதே என்றேன்...’ -தாமரைச்செல்வி கணவர் சாரதி திக் பேட்டி!
‛‛தாமரையை சிலர் குறை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் குறையில் தவறில்லை. அவர்கள் சொல்வது உண்மை தான். அந்த இடத்தில் நான் இருந்தாலும், அதை தான் சொல்வேன்; அவரது உண்மையான குணமே அது தான்’’ -சாரதி

பிக்பாஸ்_வீட்டில்_சாரதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5(Bigg Boss 5 Tamil) நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் முக்கிய வாரமாக, கடந்த வாரம், போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்திச் சென்றனர். அந்தவகையில், அதிக ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நாடக நடிகை தாமரைச் செல்வியின் குடும்ப வருகை முக்கியமாக கவனிக்கப்பட்டது. உள்ளே சென்று வந்த அவரது கணவர் சாரதி இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள போட்டியில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ அவை....
#Day82 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/SN8X2WDipJ
— Vijay Television (@vijaytelevision) December 24, 2021
தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்றேன். 100 நாள் பிரிய வேண்டுமே என்பதால் வேண்டாம் என்றேன். தாமரை நிறைய கோபம் கொள்வார். அதனால் எனக்கு பயம் இருந்தது. அதனால் மறுத்தேன். அவர் ரொம்ப நல்லவர். பாசமானவர். அனைவரிடமும் நெருங்கிவிட்டால் ஒட்டிக் கொள்வார். வேணாம் என்று நான் சொன்னாலும், அவர் ஆர்வமாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர் உள்ளே, அவராக தான் இருக்கிறார்.
இமான் அண்ணாச்சி பெரியவர். சில அறிவுரைகளை அவர் வழங்குவார். அவர் அறிவுரை சொல்லும் விதத்தில் வேண்டுமானால் புரிதல் இல்லாமல் இருக்கலாம். ப்ரியங்கா பேசிவதற்கும், உள்ளே சென்று பார்ப்பதற்கும் வேறு மாதிரி இருக்கிறார். என்னிடம் நன்றாக தான் பேசினார். ஒருவேளை என்னிடம் அப்படி பேசினாரா எனத் தெரியவில்லை. தாமரையை சிலர் குறை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் குறையில் தவறில்லை. அவர்கள் சொல்வது உண்மை தான். அந்த இடத்தில் நான் இருந்தாலும், அதை தான் சொல்வேன்; அவரது உண்மையான குணமே அது தான்.

பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு கேட் முன் நிற்கும் போதே எனக்கு ஒரு மாதிரி நெகிழ்ச்சியாக இருந்தது. கேட் திறந்ததும், ஒரு விதமான உணர்வு வந்துவிட்டது. டிவியில் பார்ப்பதற்குள், நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. தாமரைக்கு மல்லிப்பூ ரொம்ப பிடிக்கும் . அதனால், போகும் போது ,வாங்கிச் செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். எனக்கு ராஜூ ரொம்ப பிடிக்கும். அவரிடமும் அதை கூறினேன். அவரது விளையாட்டு பற்றி கூறினேன்.
தாமரையை இல்லையேன்றால் ராஜூ தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். போடும் 10 ஓட்டில் 8 ஓட்டு தாமரைக்கும், 2 ஓட்டு, ராஜூவுக்கு தான் போடுவேன். அமீர் மீது எனக்கு லேசான கோபம் உள்ளது. பாவனியோடு நெருக்கமாக இருப்பது கஷ்டமாக உள்ளது. பாவனி குடும்பம் வந்த பின் கொஞ்சம் மாறியிருக்கிறார் என தோன்றுகிறது.
#Day82 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/bgFJKE3yk7
— Vijay Television (@vijaytelevision) December 24, 2021
போட்டியில் ஜெயித்தால், அதில் கிடைக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு உதவுவோம் என்று கூறும் அளவிற்கு எங்கள் நிலை இல்லை. எங்களுக்கே நிறைய நிதி பிரச்சனை உள்ளது. அதையெல்லாம் சரி செய்ய வேண்டும். அதன் பிறகு தான் மற்றவற்றை யோசிக்க வேண்டும், என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion