Bigg Boss Grand Finale: முதல் ஆளா வெளியேறினாலும் வன்மம் குறையல.. பிக்பாஸ் மேடையில் விஷ்ணு அதிருப்தி!
Bigg Boss Tamil 7: பிக்பாஸ் டைட்டில் ரேஸில் இருந்து முதலாவது விஷ்ணு வெளியேறியுள்ளார்
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே
விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் போட்டியாளர்களுடன் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார். மேலும் தனது சினிமா கரியர் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்கள், வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்கள், ரசிகர்கள் என அனைவரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இப்படியான நிலையில் ஐந்து ஃபைனலிஸ்ட்டுகளில் இருந்து முதல் ஆளாக விஷ்ணு எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விஷ்ணு தனது அனுபவங்கள் பற்றி பேசினார். மேலும் அவருக்கு அடுத்ததாக யார் வெளியே வரப் போகிறார் , யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்பது பற்றியும் வழக்கம்போல் பேசினார்.
விஷ்ணு
நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் பேசிய விஷ்ணு “முதல் நாள் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியாது, பல குழப்பங்களோடதான் நான் உள்ள வந்தேன். நிறைய விஷயங்கள நான் இங்க கத்துகிட்டேன், உங்களோட வாரவாரம் பேசுறது, நீங்க எனக்கு கொடுத்த அட்வைஸ், எல்லாம் எனக்கு ரொம்ப உதவியா இருந்தது.
நான் 12 வருஷமா தொலைக்காட்சித் துறையில இருக்கேன், நான் இந்தத் துறைய செலக்ட் பண்ணது மக்கள் மனசுல போய் நிக்கனும் என்பதற்காக. அதுதான் என்னுடைய நோக்கம். அந்த நோக்கம் கொஞ்சம் மறைஞ்சிட்டு இருந்த மாதிரி நான் ஃபீல் பண்ணேன், அதுக்கு சரியான ஒரு மேடை எனக்கு தேவைப்பட்டது. அதனால தான் இந்த நிகழ்ச்சிக்குதான் வந்தேன், கண்டிப்பா மக்கள நான் இம்ப்ரஸ் பன்னிருப்பேன்னு நினைக்கிறேன். உங்கள் எந்த இடத்துலயாவது முகம் சுளிக்கிற மாதிரி நான் செய்திருந்தா சாரி” என்று விஷ்ணு கூறினார்.
தொடர்ந்து பேசிய விஷ்ணு “நான் ரொம்ப நாளா மணி தான் வெளிய வருவான்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனால் உள்ள இருக்க எல்லாரையும் அவன் வெளிய அனுப்பிட்டு இருக்கான். ஆனால் மணி உணமையாகவே ஒரு நல்ல மனிதன். யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டான் மணி. அதனாலதான் இவ்ளோ நாள் உள்ள இருக்கான்னு நினைக்கிறேன். அடுத்ததாக அர்ச்சனா. அவரை ஒரு பாப்பானு சொல்லலாம். அவர் வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார்.
அதிருப்தியை வெளிப்படுத்திய விஷ்ணு
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஷ்ணுவிடம் கமல்ஹாசன் மீதி போட்டியாளர்களை உள்ளே சென்று பார்க்க அழைத்தபோது அதற்கு விஷ்ணு “இப்போதான் அவங்கள பாத்துட்டு வரேன். நான் எலிமினேட் ஆனத பார்த்து சந்தோஷப்படறாங்க” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் மாயா கிருஷ்ணன் இந்த சீசனில் வெற்றிபெறுவார் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்
மேலும் படிக்க : Bigg Boss 7 Winner: பிக்பாஸ் 7 வெற்றியாளரின் பரிசுத்தொகை இவ்வளவா? கை நிறைய அள்ளிச் செல்லப்போவது யார்?