Maya Krishnan: நான் டைட்டில் வின்னர் தான்.. மூன்றாவதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மாயா உற்சாகம்!
Bigg Boss Season 7: விஷ்ணு , தினேஷ் ஆகியோரைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து மாயா கிருஷ்ணன் வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் (Bigg Boss Season 7) டைட்டில் வின்னருக்கான போட்டியில் இருந்து விஷ்ணு மற்றும் தினேஷ் வெளியேறியதைத் தொடர்ந்து மூன்றாவதாக மாயா கிருஷ்ணன் வெளியேறியுள்ளார்.
மேடையில் பேசிய மாயா கிருஷணன் “நான் முன்னாடியே சொன்னது போல நான் ஆல்ரெடி வின்னர் தான். ஏனென்றால் நான் மக்களின் ஆதரவை சம்பாதிச்சுட்டேன். பிக்பாஸ் வீட்டிற்குள் அத்தனை நண்பர்களை நான் சேர்த்திருக்கிறேன். இந்த இடத்தில் நான் உரிமை கொண்டாடும் அதே அளவிற்கு இந்தப் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் இந்த இடத்திற்கான உரிமை கொண்டாடத் தகுதியானவர் தான்.
ஒரே ஒருத்தருக்கு மட்டும் நான் நன்றி சொல்ல மறந்துட்டேன். துயரம் என்று ஒன்று வருவதற்கு முன் என்னோட கையப் பிடிச்சு நின்னாங்க. பூர்ணிமாவுக்கு என்னோட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவங்களோட நம்பிக்கை, தைரியம் எல்லாம் வேற லெவல். அவங்களால் நான் நிறைய சிரித்திருக்கிறேன்” எனப் பேசினார்.