32 வயதில்... கல்லீரல் சிரோஸ்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
பிரபல இளம் நடிகை ஒருவர், கல்லீரல் சிரோசிஸ் பிரச்சனை காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் தான் மாடலும், நடிகையுமான சனா மக்புல். ஹிந்தியில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், இதை தொடர்ந்து தெலுங்கு திரைப்படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் நுழைந்தார்.
பின்னர் தமிழில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'ரங்கூன்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தின் தோல்வி காரணமாக சனா மக்புலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
அதே போல் 'காதல் கண்டிஷன் அப்ளை' என்ற படத்தில் சனா நடித்திருந்தாலும் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் ஹிந்தி சீரியல்கள் பக்கமே திரும்பினார். பிக்பாஸ் ஹிந்தி ஓடிடி 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் மாறினார்.
இந்நிலையில் நடிகை சனா மக்புல் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, கல்லீரல் சிரோஸ் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளதாக கூறி இதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய பிரச்சனை குறித்து பதிவிட்டுள்ள சனா, "பல வருடங்களாக கல்லீரல் அழற்சி காரணமாக அவதிப்பட்டு வருகிறேன்.
எனக்கு கல்லீரல் சிரோஸ் பிரச்சனை இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாமல் இந்த நோய் எனக்கு குணமடைய வேண்டும் என காத்திருக்கிறேன். என் நிலைமை மோசமடைந்து வருகிறது என்றாலும், மனதளவில் வலுவாக இருக்கு முயற்சி செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.
இவருக்கு கூடிய விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சனா விரைவில் குணமுடைய அவருடைய ரசிகர்கள், தங்களின் பிரார்த்தனையை தெரிவித்து வருகிறார்கள்.






















